Wednesday, November 14, 2012

தமிழா! நீ வேடிக்கை மனிதர்களை போல் வீழ்வாயோ?

தேடிச் சோறு நிதம் தின்று- பல
சின்னஞ் சிறு செய்கைகள் செய்து - மனம்
வாடித் துன்பம் மிக உழன்று -
பிறர்வாடச் செய்கை பல செய்து
கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பலவேடிக்கை மனிதைரைப்போல
நானும்வீழ்வேன் என்று நினைத்தாயோ???

பாடிய பாரதி கிழப்பருவம் எய்துமுன்பே கூற்றத்தைத் தானே தேடிப்போனான்... பட்டினி நோயால் !!

தமிழன் பாடு அன்றுமுதல் இன்றுவரை இப்படியே.. தமிழ்த் தாத்தன் எங்கள் பாரதி அனைத்திற்கும் தலைக்கோல் !!!! தானே மாய்ந்தான் பசித் துயரால் .......

சில வீணைகள் பிறக்கும் போதே பதியப்படுகிறது.. புழுதியில் எறியவென வருங்காலத்தில் தமிழன் கிழடுதட்டி சாவது மிகவும் குறைந்துவிடும்!! ஏனெனில் அதற்கு முன்பே அவனை மூட்டைக் கட்டும் முயற்சிகள் அனைத்தும் நம் அரசியல் வியாதிகள் பேராதரவுடன் நம் கண்முன்னே நடந்தேறி வருகிறதே..??

கருநாடகமும், ஆந்திரமும் கொண்ட தயாள மனத்தினால், குருவையும் சம்பாவும் கைவிட ..தாளடி தாளம் தப்பிய மழையில் ததிங்கிணத்தோம் ஆட. கைய சுட்டு காலை சுட்டு நட்டுவச்ச சொச்சமும் , ஏரிக்குள்ளும் குளத்துக் குள்ளும் கோடுபோட்டு பிளாட்டு போட்ட புண்ணியவான்கள் புண்ணியத்தால்.. வடிகால் இல்லாத வெள்ளத்தில் மூழ்க.. வேடிக்கை பார்க்கும் அரசு வேகாத சோறு தரும் கஞ்சித் தொட்டியில்..!! அதை வாங்க வரிசைகட்டி நிற்கும் நம் தமிழன் பசிகொண்ட சகமனுசன் காலில் மிதிபட்டு சாவன்..!! செத்தவனுக்கு நஷ்ட ஈடு வாங்கும் கூட்டத்திலும் நொந்து சாவன் !!

கிடக்கறது கிடக்க கிழவனைத்தூக்கி மனையில வெச்ச கதையா, உள்ளூரு பிரச்சினையே தலைக்குமேல் இருக்க, கூடங்குளம் அணு உலையும் தன பங்குக்கு தன வேலையைக் காட்டும்..யப்பான் நாட்டில் நடந்தது போல..!!போதாக் குறைக்கு வந்திருக்கே , "பிசாசுத் துகள் " என செல்லப் பெயரால் வழங்கப்படும் நியூட்ரினோ ஆய்வகம்!! தேனீ மலையைக் குடைந்து பிசாசுத் துகளை வடிகட்டி ஆராய்ச்சி நடத்தப் போகிறார்கள் நம் விஞ்ஞான மாமணிகள்!! விஷயம் தெரிந்த கேரளம், வங்காளம்,ஓடிசா எல்லாரும் துரத்தியபிறகு..தமிழன் ரொம்ப நல்லவன்டா எனத் தெரிந்துகொண்ட பிசாசு தேனியைப் பிடித்திருக்கிறது ...!

இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் கொல்லுதாம் தமிழனை, ஒரேடியாக் கொன்னுகுவிச்ச ராஜபக்சேவின் ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க இன்னும் முதல் வரிசையில் நிற்கிறது இந்திய அரசு..! இப்போதும் விருந்தாளியாக சிறிலங்கா போயிருக்கிறார் இந்தியத் தளபதி...!!!! தமிழன் கிழடுதட்டி சாகமாட்டான் அதற்கு முன்பே அவனுக்கு காத்திருக்கிறது பரலோகம் வைகுண்டம்..இன்னும் பல வாயில்கள் என்று இப்போதேனும் நம்புவீர்களா..?? இன்னும் கட்டியங்கள் வேண்டுமா என் இனிய தமிழ் மக்களே..?????!!!


ரௌத்திரம் பழகு
...யாழினி...

7 comments:

Unknown said...

மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ

Aathira mullai said...

பயனுள்ள தகவல்கள் நிறைந்த நல்ல பதிவு.

http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

யாழினி சொன்ன கருத்தாய்ந்து! என்தமிழா!
பாழினி நீக்கிப் பகைபோக்கு! - வாழினி
ஓங்கி ஒளிர உரியவழி தெளிவுணா்ந்து
தாங்கித் தரிப்பாய்த் தமிழ்

இராஜராஜேஸ்வரி said...

ரௌத்திரம் பழகு

இராஜராஜேஸ்வரி said...

ரௌத்திரம் பழகு