அக்காலத்தில் மலையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து இருந்த காரணத்தினால்,
திருநீர்மலை என்ற பெயர் உண்டானது.
இத் தலத்து பெருமான் நான்கு கோலங்களில் காட்சி தருகின்றார்.
கிடந்த கோலத்தில், அரங்கனாதனாதப் பெருமாளாக மலையிலும்,
இருந்த கோலத்தில், நரசிம்மராகவும்,
நடந்த கோலத்தில் திரி விக்கிரமனாகவும்,
மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாளாகவும் காட்சி தருகின்றார்.
இந்த தளத்தின் சிறப்பு என்னவென்றால்,
வேலை வெளி மாநிலங்களில்,அந்நிய தேசத்தில் கிடைத்தாலும்
சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையாததனால்
வாய்ப்பினை பயன்படுத்த முடிவதே இல்லை.
முயன்று சென்றாலும்,
போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட
என்ற கதையாக உடனே திரும்பிவிடும் சூழ்நிலை .
கடல் கடந்து, படிக்க ஆசை. ஆனால் இயலாது.
(பணம் இருந்தாலும் வாய்ப்பு அமையாது)
இத்தகையவர்கள், இந்த தலத்து இறைவனிடம்
முறைப்படி பூஜித்து வழிபட்ட சில மாதங்களில்,
சில வருடங்களில் நல்ல வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
செல்லும் சூழ்நிலை உருவாகி விடும்.
புதன் திசையில் கேது புத்தி, கேது திசையில் புதன் புத்தி
நடக்கும் காலத்தில் முறைப்படி பூஜை செய்து திரும்ப
தங்களின் கஷ்டங்கள் குறைவதனை உணரலாம்.
மாணவர்கள், ஆசிரியருக்கு தெரிந்து செய்த தீமைகள்,
ஆசிரியர் மாணவனுக்குத் தெரிந்து செய்த தீமைகள்காரணமாக,
இவர்களின் சந்ததியினருக்கு கல்விக் குறைபாடு நிகழும்.
இத்தலத்து இறைவனிடம், பூஜை செய்வது மட்டும் அல்லாது
படிக்க இயலா நிலையில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதும்,
கல்விகற்க - குழந்தைகள், சிறார்கள், வாலிப வயதினருக்கு
பிரதிபலன் (பணம் பெறாமல் ) சொல்லித் தருவதும்,
படிப்பதற்கு வேண்டிய அனைத்து உதவிகள் செய்வதும்
அவசியமாகும்.
இவ்வாறு இவர்கள் குறைந்தது 7 வருடங்கள்
கல்கர்க்க உதவுவதனை சேவையாக செய்யவேண்டும்.
இயற்கையாகவே, இத்தகையோருக்கு இறைவன்
கல்விக் கற்க உதவி செய்யும் மனநிலையினை
தானே ஏற்படுத்தியும், உதவிகள் செய்ய வைத்து விடுவான்.
தனது செலவிலே, ஏழைகளை வெளி நாட்டிற்கு
படிக்கவும், உழைத்து பொருளீட்டவும் செய்துவிடுவான்
இத்தலத்து இறைவன்.
பரிகார பூசை முறைகள் அடுத்த பதிவில்...........
(படங்கள் உதவி ....கூகுள் இமேஜ் )
1 comment:
ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு நன்றி
Post a Comment