April 02: இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று
பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன்
நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி)யின் அறிக்கை குஜராத்
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப்
பின்பற்றுவதில் குளறுபடி, அரசின் பட்ஜெட், விளையாட்டுக் கொள்கை வகுப்பதில்
திறமையின்மை, சரியான குடிநீர்க் கொள்கை உருவாக்கப்படாததால் மாநிலம்
முழுவதும் குடிநீர் பற்றாக்குறை, தேசிய நாதிநீர் பாதுகாப்புத்திட்டம் சரிவர
நிறைவேற்றப்படாமை, நதியில்
கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்க்கொள்ளாமை, சபர்மதி ஆற்று நீர்
தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது.
நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி
அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான
நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை,
தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை. நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள்
தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை
வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை, என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிந்திக்கவும்: இவரைத்தான் இந்தியாவின்
பிரதமராக்க வேண்டும் என்று சிலர் துடிக்கின்றனர். மத துவேசம் பிடித்த
மோடியின் ஆட்சியை பொய்களை சொல்லி புகழாரம் சூட்டி இந்தியாவின் நம்பர் 1
மாநிலமாக மாற்றுவதில் சிலருக்கு என்ன லாபமோ! இதன் மூலம் இவர்கள்
இந்தியாவில் மீண்டும் ஒரு வர்ணாசிரம ஆட்சியை கொண்டுவர துடிக்கின்றனர்.
ஜெயாவும், சோவும், மோடியும், சுப்பிரமணிய சுவாமியும், ராமகோபால ஐயரும்,
அத்வானியும், ஒரு நல்ல கூட்டணிதான். ஒருபுறம் மதவாதம் மறுபுறம் மன்மோகன்
சிங் நடத்தும் முதலாளித்துவ ஆட்சி, இவர்களின் பிடியில் சிக்கிய இந்திய
மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம். மக்கள் விழிப்போடு இருந்து ஒரு மாற்று
சிந்தனை தளத்தை உருவாக்க வேண்டும் இல்லையேல் கோவணம் கூட மிஞ்சாது.
மதவாதமும் முதலாளித்துவமும் இரண்டும் ஒரு நாணயத்தின் இரட்டை பக்கங்களே! இரண்டுமே ஆபத்தானது!
*மலர்விழி*
1 comment:
தொலை நோக்குத் திட்டம் என்று சொல்லியே மக்களை ஆட்சியாளர்கள், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். எத்தனை காலமானாலும், ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டிருப்பர்.
Post a Comment