Showing posts with label கோயமுத்தூர். Show all posts
Showing posts with label கோயமுத்தூர். Show all posts

Saturday, October 29, 2011

கோவையின் பெருமை-1



வாடிய பயிரை  கண்டபோதெல்லாம்  வாடினேன்  என்றார்-வள்ளலார் 

பிணியிலே (நோயிலே) கொடுமையான பிணி எதுவென்றால் பசிப்பிணி தான் என்கிறார் அவர் ,
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


கோவையை நினைத்து பெருமை பட பல விஷயங்கள் இருந்தாலும். நான் பெருமையாக கருதுவது பசிப்பிணி போக்கும் செயலை செய்வோரைத்தான். அதில் குறிப்பிட தகுந்த ஒரு உணவாக நிறுவனம் தான் ஹோட்டல் அன்னலட்சுமி  நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற இந்த ஹோட்டலின் கிளைகள் கோவையில் பல இடங்களிலும், மற்றும் உலகின் பல நாடுகளிலும் உள்ளது.  அதில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர் மில்ல்ஸ் பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்து அமைந்துள்ள கிளையில் ஒரு விசேஷம், அது என்னவென்றால் இங்கு சாப்பிட வருபவர்கள்  பப்பே சிஸ்டம் என்ற வகையில் தாங்களே தங்களுக்கு தேவையான உணவுவகைகளை அதற்க்கான இடத்தில் சென்று வாங்கிக்கொண்டு  மேசையில் அமர்ந்து சாப்பிடலாம். உணவருந்தி முடிக்கும் போது ஊழியர் ஒருவர் ஒரு கார்டை கொண்டுவந்து தருவார், அதை திறந்து பார்த்தல் அதனுள்ளே இருப்பவர்களிடம் பெற்றுக்கொண்டு இல்லாதோர்க்கு உணவளிக்கிறோம். தங்களால் இயன்றதை அளியுங்கள் இல்லாதொர்க்காக  என்று எழுதி இருக்கும்,    நம்மால் இயன்றதை அந்த கார்டினுள்ளே வைத்து விட்டு  வரலாம்,.

இப்படி ஒரு உணவகமா என்று நான் முதல் முறை சென்ற போது அசந்து விட்டேன், இதே உணவகத்தின் ரேஸ் கோர்ஸ் கிளையில் சாப்பாடு ஒன்று ரூபாய்   350 /- அனால் இந்த கடையில் நம்மால் முடிந்ததை கொடுத்தால் போதும், எனக்கெதிரில் அமர்ந்து சாப்பிட்டவர் மூன்று பேர் சாப்பிட்டு விட்டு ரூபாய் 2000 /- வைத்துவிட்டு போனார், 
அதை வைத்து குறைந்தது நூறு பெரிக்கவது உணவளிக்கலாம் அல்லவா, 
அடைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து  வருகிறார்கள்,


முதலாளி இல்லாத இடம்தானே என்று ஊழியர்களோருவரும் அலட்சியமாக நடப்பதில்லை, அந்த கடையில் உணவின் தரமோ, சுவையோ, சுகதரமோ எதுவும் குறை சொல்ல முடியாது,  பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்தி செல்கின்றனர், 
இத்தனைக்கும் இப்படி ஒரு வசதி இருப்பது கோவையிலேயே பலபேருக்கு தெரிவதில்லை, இப்படி ஒரு விஷயத்தை  வலைப்பூவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது பெருமையாக உள்ளது. கோவை வரும்போது இந்த உணவகத்தில் தவறாமல் உணவருந்தி உங்கள் கருத்தையும் வெளியிடுங்கள்,  பல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி 

ஏமாற்றத்தை தவிர்க்க  பிரதி திங்கள் உணவகம் விடுமுறை 

அனைவருக்கும் வணக்கம். தொடரும்......






தவறாமல்  கருத்துரை  இடுங்கள்  நான்  ஒளிர .....

தாயாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமம் ஆனைகட்டி - கோவை




உலக வரைபடத்தில் குறிப்பிடுமளவுக்கு கோவை வளர்ந்து விட்டாலும் அதனுள் இருக்கும் அதிசயங்கள் ஏராளம் , அதில் ஒன்று  ...

அது 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நண்பர் ஆனந்த்  வர்ப்புருத்தளினாலே  ஆனைகட்டி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமத்திற்கு செல்ல முடிவெடுத்தோம். நாங்கள் நான்கு பேர் இரண்டு டூ வீலரில் கோவை சாய்பாபா காலனியிலிருந்து கிளம்பினோம். காணுவாய் என்ற கிராமத்தை தாண்டி சென்றதும் வனம் நம்முடன் பயணிக்கிறது அடுத்து தடாகம் மாங்கரை என்ற கிராமங்களை தாண்டியவுடன் அதுவரை தெரிந்த ஒரு சில வீடுகளும் மறைகிறது. வழியில் சில செங்கல் காளவாய்களும் உள்ளன. மாங்கரையிலிருந்து வனத்துறை கட்டுப்பாடு ஆரம்பமாகிறது மாங்கரை செக்போஸ்ட் அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு மேற்கொண்டு பயணம் ஆரம்பம். செக்போஷ்டிலேயேயானை நடமாட்டம் பற்றி சொல்கின்றனர். முன்னெச்சரிக்கையோடு பாதையை கவனித்தபடி செல்கிறோம் நாம் ஒரு பத்து கிலோ மீட்டர் பயணம்போகும் இடமெல்லாம் பசுமை. பசுமை .பசுமை. பசுமையை தவிர வேறெதுவுமில்லை இந்த இடம் இன்னும் அவ்வளவாக ஜனநெருக்கடிக்கு ஆளாகமளிருப்பதால் நகர வாழ்க்கைக்கு சற்று நேர  ஒய்வு .

சிறிது நேர தொலைவில் ஆஷ்ரமம் வருகிறது ஆஸ்ரமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஆனைகட்டி என்ற சிற்றூர் வருகிறது இது தான் தமிழக எல்லை முடிவு ஒரு பாலத்திற்கு அந்த பக்கம் லாட்டரி சீட்டு கடைகள் அதிகம்  தென்படுகின்றன. இதை வைத்து கேரளா எல்லை ஆரம்பமாவதை  தெரிந்து கொள்ளலாம். கேரளா அரசு என்றுதான் இதை ஒழிக்க போகிறதோ தெரியவில்லை ,

மீண்டும் ஆஸ்ரமத்திற்கு வருவோம் ஆஸ்ரமத்தின் கேட்டை தாண்டியதுமே ஒருவித அமைதி, வலது பக்கம் செல்லும் மண் தடத்தில் சென்றால் ஒரு ஆலயம் தென்படுகிறது அருகே நெருங்கி பார்த்தால் அங்கு சாந்த சொரூபமாக தட்சினா மூர்த்தி அமர்ந்திருக்கிறார் அங்கு சிலர் பூஜைக்காக கூடி இருந்தனர் அவர்கள் எங்களை சீக்கிரம் மலை மீது உள்ள கோவிலுக்கு செல்லுங்கள் மாலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை சாத்தி விருவார்கள் என்றனர், உடனே ஆலயத்தினருகில் உள்ள மண் தடத்தில் நடக்க ஆரம்பித்தூம் ஆஸ்ரம குடில்களை எல்லாம் தாண்டி ஒரு சிறிய மலை அதன் மேல் முருகன் கோவில் அங்கிரிந்து பார்த்தால் ஆஸ்ரமம் முழுமையுமே தெரிகிறது அவ்வளவு ரம்மியமான  காட்சி சிறிது நேரம் ரசித்து பார்த்துவிட்டு முருகனையும் வணங்கிவிட்டு கீழிறங்கினோம்.

 அடுத்து தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு வந்தோம் அன்று வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கோவிலில் மிகவும் விசேசம். கூட்டம் ஒன்றும் பெரிய அளவில் இல்லை எங்கள் நான்கு பேரையும் சேர்த்து மொத்தம் முப்பது பேர்தான் இருப்போம் பெண்கள் சிலர் பஜனை பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர் அந்த பாடல்களுக்கும் அந்த சூழ்நிலைக்கும் நாங்கள் மெய்மறந்து விட்டோம், அட இத்தனை நாள் இப்படி ஒரு விஷயத்தை இழந்து விட்டோமே என மனம் அலுத்துக்கொண்டது.
பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது பிறகு அரை மணி நேரம் அமர்ந்துவிட்டு கிளம்ப ஆயத்தமானோம் உடனே அங்கிருந்தவர்கள் உணவருந்தி விட்டு செல்லலாமே என கூறினார் பிறகு ஆசிரமத்தில் உணவருந்தும் அறைக்கு சென்று தட்டுகளை நாமே எடுத்து சாப்பிட்டு விட்டு நாமே அதை கழுவி வைத்து விட்டு வந்தோம் வானம் இருட்டி விட்டது எப்படியோ ஒரு வழியாக இருளுக்கும் யானைக்கும் பயந்து பயந்து வீடு வந்து சேர்ந்தோம்.  அதன் பிறகு செல்லும் போதெல்லாம் பேருந்தில்தான் சென்றேன். மன அமைதி வேண்டும் போதெல்லாம் அங்கு சென்று விடுவேன்.  இவர்களின் இன்னொரு ஆஸ்ரமம் ரிஷிகேஷில் உள்ளது. ரஜினி அவர்கள் அடிக்கடி செல்வதால் ரிஷிகேஷ் பிரபலமடைந்தது போல அந்த ஆஸ்ரமம் பிரபலம் அடையவில்லை இங்கும் அவர் அடிக்கடி சத்தமில்லாமல் வருகிறார் போகிறார் அனால் அது யாருக்கும் தெரிவதில்லை ரிஷிகேஷ் ஆஸ்ரமம் பற்றி பிறகு ஒரு  இடுகையில் விலாவரியாக அலசலாம் உடனே தெரிந்து கொள்ள நமது நண்பரின் வலை தளம்  http://arivhedeivam.blogspot.com/2010/09/7.html   சென்று பார்க்கவும் இன்னொரு முக்கியமான குறிப்பு தயவு செய்து யாரு டூ வீலரில் செல்ல வேண்டாம் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து varuvathal  கூறுகிறேன் .


கோவிலைப்பற்றி :

விசேஷ தினங்கள் 
அமாவாசை, பவுர்ணமி,வியாழக்கிழமை.

தங்குமிடங்கள் :
ஆச்ரமத்திலும்,ஆஸ்ரமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தாங்கும் விடுதி ஒன்றும் உள்ளது பெரும்பாலும்  தங்குவதற்கு கோவை வந்து விடுவது நல்லது நமது பட்ஜெட்டிற்கு அணைகட்டி  விடுதி சரிவராது 

ஆனைகட்டியை பற்றி :

கோவையிலிருந்து கேரளா செல்ல பாலக்காடு வழியாக செல்வோம் இன்னொரு வழியும் உள்ளது அந்த வழிதான் வேலாண்டி பாளையம், காணுவாய்,மாங்கரை, ஆனைகட்டி வழியாக கேரளாவுக்குள் அகழி,மன்னார்க்காடு,வழியாக கோழிக்கோடு செல்கிறது இந்த வழியாக மன்னார்க்காடு கோழிக்கோடு சென்றால் பாலக்காடு வழியாக   செல்வதை விட 50 கிலோ மீட்டர் தூரம் குறைவு கோவையிலிருந்து அனைகட்டிக்கு தமிழக அரசு மற்றும் கேரளா அரசு சார்பாக பேருந்துகள் நிறைய உள்ளன

நீங்களும் ஒரு முறை வந்து பாருங்க..........   
  

தவறாமல் கருத்து சொல்லுங்கள் நான் வளர