Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Tuesday, November 8, 2011

வான் சிறப்பு-002



11,  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்


12, துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

13, விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி

 மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்


14, ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

15,கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்     
                                                                          
                                                                           றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

 பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்


16, விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

 வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது



17,நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

 மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்



18,சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது



19,தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

 மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.



20,நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை மறக்காமல்  பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும்  படிக்க லிங்க் அனுப்புங்கள்.  திரட்டிகளிலும் சேர்த்திடுங்கள், மறக்காம . Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  எனது  பதிவு உங்கள் Dash Board க்கு வந்து சேரும்,   உங்களது Email id ஐ வலப்புறம் உள்ள கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து சேரும்

அன்புள்ள நண்பர்களே எல்லோரும் எழுதிய தெளிவுரை இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், எனது டிசைனை  சேர்த்தி உள்ளேன் , எனது டிசைன் பற்றி 

மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,

Wednesday, November 2, 2011

கடவுள் வாழ்த்து -001




அகர முதல எழுத்தெல்லாம் -ஆதி 
பகவன் முதற்றே உலகு.
அகரம் எழுத்துக்களுக்க்கு முதன்மை,ஆதிபகவன்-உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் முதன்மை,,,,,,,,,,

அன்புள்ள நண்பர்களே எல்லோரும் எழுதிய தெளிவுரை இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், எனது டிசைக்னை  சேர்த்த போகிறேன், எனது டிசைன் பற்றி 

மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,