Wednesday, August 14, 2013

ஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு
ஆயிரமாவது பதிவு .... photo SHIVA_FAMILY_by_VISHNU108.gifநித்திய பாராயண நூல்களில் ஒன்றாக வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்த விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குகிறது.

விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார் ..எனவே பொருளுணர்ந்து சொல்லிப் பலனடைவோம் ..

நம் அனுபவங்கள் கூடக்கூட வயது ஏற ஏற பொருளும் அதற்கேற்றபடி மெருகேறும் அற்புதத்தை உணரலாம் ..!

அற்புதம் நின்ற கற்பகக் களிறாய் ’ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை  வழிபட்டு உய்வதற்காகவும்  அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளிய  விநாயக வடிவம் திருவருளால் மட்டுமே நிகழ்வது.....!

Tuesday, August 6, 2013

திருதெளிச்சேரி சூரிய பூஜை

இந்த சூரிய பூஜை மனிதர்களாகிய நாம் சூரியனுக்கு செய்யும் பூஜை அல்ல. சூரிய பகவான் சிவபெருமானுக்கு செய்யும் பூஜை.  இது எப்படி சாத்திய என்று கேட்கின்றீர்களா? இப்பதிவை  முழுவதுமாக படியுங்கள் எவ்வாறு சூரியன் சுவாமியை  தொட்டு வணங்கி பூஜை செய்கிறான் என்பது விளங்கும்.

காரைக்கால் தலத்திற்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளனஅதில் முதலாவது ஒரு சமயம் பூமியில் பல வருடங்கள் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் எல்லாம் வாடிய போது, அன்னை பார்வதி தன் கருணையினால் உலக உயிர்கள் எல்லாம் உய்ய, அரிசொல் ஆற்றின் (அரசலாறுகரையில் சாகம்பரியாக தவம் செய்தாள்அம்மையின் தவத்தினால்  மழை பொழிந்து உயிர்கள் எல்லாம் உய்வுற்றனபின்னர் ஐயனும் அம்மையும் கைலாய நாதராகவும்சொர்ணாம்பிகையாகவும் இங்கேயே திருக்கோவில் கொண்டனர்.

"அனைத்து உயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைத்த" பெருங்கருணைக் காரைக்கால் அம்மையார் பிறந்த  புண்ணிய பூமி இது.   தமது மனித உடல் விடுத்து பேய் உரு கொண்டு திருக்கயிலையில் கால் படக்கூடாது என்று தலையால் நடந்த சென்றபோது,  இறைவன் அவரது திருவாயினாலேயே இவள் நம்மை பேணும் அன்னை காண்” என்று இறைவிக்கு அறிமுகப்படுத்துகின்றார். அந்த காரைக்காலம்மையார்  இன்றும் அன்னம் பாலிக்கும் திருக்கோலத்தில் திருக்கோவில் கொண்டருளும் தலம். 

இந்தப் பெருமைகள் பெற்ற காரைக்காலில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஒரு தலம்தான் திருதெளிச்சேரி என்னும்  தலம். தற்போது இத்தலம் கோவில்பத்து பார்வதீஸ்வரம்  என்று அறியப்படுகின்றது. காரைக்கால் நகரின் புது பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றிலே போகமார்த்த பூண்முலையாள் உடனுறை தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசனம் செய்யும்  செல்லும் போதுகாரைக்கால் அம்மையார் காலடிபட்ட,  காரைக்கால் மண்ணை மிதிக்க வேண்டாம் என்று எண்ணி அப்போது காரைக்காலின் வெளிப்புறமாக அப்போது  இருந்த இந்த இடத்தை தாண்டி செல்லும் போது இத்திருக்கோவிலின்  குளக்கரையில் இருந்த விநாயகப்பெருமான் அவரை கூவி அழைத்ததால் "கூவிப்பத்து" என்பது மருவி "கோவில்பத்து" ஆகி விட்டதுதிரும்பி வந்த சம்பந்தர் சுயம்வர தபஸ்வினி உடனுறை பார்வதீஸ்வரரை  பதிகம் பாடி வணங்கி  பின்னர் திருநள்ளாறு சென்றார் .

இத்திருக்கோவிலுடன்  இரண்டு ஐதீகங்கள் இனைந்துள்ளனமுதலாவது பார்த்தன் பாசுபதஸ்திரம் வேண்டி தவம் செய்த தலம் இத்தலம் என்று தலபுராணம் கூறுகின்றது.  இரண்டாவது  சூரியன் தன் சாபம் தீர பார்வதீஸ்வரரை பூஜை செய்தான் என்னும் ஐதீகம்.

சூரியன் பூஜை செய்ததற்கு அடையாளமாக இன்றும் வருடத்தில் மூன்று நாட்கள் சூரியனின் கதிர்கள் மாலையில் மூன்று நாட்கள் இறைவனின் திருமேனியில் விழுகின்றனபங்குனி மாதம் 18,19,20 தேதியன்று இவ்வாறு சூரியன் பார்வதீஸ்வரரை பூஜை செய்கின்றான்அப்போது பார்வதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் சூரிய பூஜை அல்லாது  கார்த்திகை சோமவார மாலை 108  சங்காபிஷேகமும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றதுஒரு வருடம் ஐந்து சோமவாரங்கள் வந்த போது நிறை வாரம் ஐயன், இந்த நாயேனது சங்காபிஷேகத்தை ஏற்று மகிழ்ந்தார்.

சூரியனது சுழற்சியை  துல்லியமாக கணித்து அவன் கதிர்கள் சரியாக கர்ப்பகிரகத்தில் உள்ள இறைவனின் திருமேனியில் விழும் படியாக திருக்கோவிலின் திசையையும்உயரத்தையும் கணித்து கட்டிய அந்தக் கால சிற்பிகளின்  நுட்ப சிற்ப சாஸ்திர மற்றும் வானியல் அறிவாற்றலை எண்ணவென்று சொல்லஇந்த சூரிய பூஜையின் சில காட்சிகளைத்தான் இப்பதிவில் காணுங்கள் அன்பர்களே. அடியேனுக்கு இந்த சூரிய பூஜையை காணும் பாக்கியம் கிட்டியது. அப்போது கேமராவெல்லாம் அவ்வளவு பிரபலமில்லை. ஆகவே அந்த நினைவுகள் எல்லாம் மனதில்தான் இருந்தன. ஆகவே அவற்றை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இந்த  2012ம் வருட ஏப்ரல் முதல்நாள் பங்குனி மாதம் 19ம் நாள் சூரிய பூஜை படங்களை அடியேனது நண்பர் திரு. பொன். மனோகரன் அவர்கள்  அன்பு கூர்ந்து அனுப்பி வைத்திருந்தார் அந்த அரிய காட்சிகளை அன்பர்களாகிய தங்களுடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
திருக்குளத்தில் அந்தி மாலை சூரியனின் பிரதிபிம்பம் 

பார்வதீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் எனவே சூரிய பூஜை மாலை நேரம் நடைபெறுகின்றது.  அம்மையின் ஞானப் பாலுண்ட ஆளுடைப் பிள்ளையை, ஐயனை தரிசிக்காமல் செல்கின்றீரே என்று "கூவிக் கூப்பிட்ட பிள்ளையார்" குடி கொண்டிருக்கும் குளக்கரையிலிருந்து சூரியன் மேற்கு வானத்தில் உள்ள காட்சியையும் சூரியக் கதிர்கள் திருகுளக்கரையை தாண்டி திருக்கோவிலின் உள்ளே வரும் காட்சியை காண்கின்றீர்கள். ( அன்று போலவே இன்றும் ஆடுகள் குளக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கின்றன)


ப்ரத்உஷத் கால  அருண   சூரியக்கதிர்கள் முகப்பு அலங்கார வளைவையும், அதிகார நந்திகளையும்  ஐந்து நிலை இராஜ கோபுரத்தையும் தன் பொன் வண்ண கதிர்களினால் தங்க மயமாக்கும் அற்புத காட்சி. அனைத்தும் இளஞ்சிவப்பு மயமாக இருக்கும்  காட்சியை காண்கின்றீர்கள் அன்பர்களே.

 சந்தியாக்கால மஞ்சள் சூரியக்கதிர்கள் இராஜ கோபுரத்திற்குள் ஐயன் அனுமதி பெற்று நுழைந்து கருவறையை நோக்கி  செல்லு அற்புதக் காட்சி. கொடி மர விநாயகரை சூரிய கிரணங்கள் தொழும் காட்சியையும், மஹா மண்டபத்தின் நுழைவாயிலில் சூரியன் நிற்பதையும் இப்படத்தில் காண்கின்றீர்கள். அன்பர்கள் சூரியன் ஐயனின் சிவலிங்கத் திருமேனியை தழுவும் அந்த கணத்திற்காக காத்து நிற்கின்றனர்.


மஹா மண்டபத்தின் வாயிலைத்தாண்டி சூரியக் கதிர்கள் செல்லும் காட்சி. வாயிலின் இரு புறமும் திருஞான சம்பந்தரின் திருப்பதிகள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். வாயிலின் மேல் உள்ள சுதை சிற்பத்தில் சூரியனும், பார்த்தனும் பார்வதீஸ்வரரை பூஜிக்கும் சுதை சிற்பம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதை காண்கின்றீர்கள் அன்பர்களே.


மஹா மண்டபத்தின் உள்ளே சாயுங்கால சூரியக் கதிர்கள் செல்லும் காட்சி. சூரிய கதிர்களை தெளிவாக பக்தர்கள் காணும் விதமாக சாம்பிராணி புகை போடப்படுகின்றது அதனால் படம் இவ்வாறு உள்ளது. கர்ப்பகிரகத்தில் உள்ள விளக்குகளை காண்கின்றீர்கள். சூரியன் தற்போது கர்ப்பகிரகத்தின் படிக்கட்டில்  ஏறி சென்று சுயவர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரரை பூஜை செய்ய காத்து நிற்கின்றான்.


அனைவரும் காத்திருந்த அந்த தருணமும் வந்து விட்டது கருவறையின் உள்ளே சிவபெருமானின் திருமேனியைத் தொட்டு வணங்குகிறான் சூரியன்.  அன்பர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். ஐயனுக்கு அற்புத அலங்காரம். வெள்ளி தாமரை பிரம்ம பீடமும், நாகாபரணமும், நவரத்னம் பதித்த நகைகளும் அப்படியே சூரியக் கதிர்களை அன்பர்களின் மேல் பிரதிபலிக்கின்றன . அந்த வேளையில் வேத மந்திரங்கள் முழங்க அலங்கார தீபம் ஐயனுக்கு காட்டப்படுகின்றது. இந்த சூரிய பூஜையைக் காண்பவர்கள் அனைவரும் ஐயனின் அந்த அற்புத அலைகளை உணர்கின்றனர். இதற்காகவே இது போன்ற சமயங்களில் இறைவனை வழிபடவேண்டும். இந்த அதிர்வுகள் நமது உடலையும், உள்ளத்தையும் தூய்மை ஆக்குகின்றன.


திருக்குளத்தின் கரையில் அமைந்துள்ள கூவீக் கூப்பிட்ட விநாயகரின் திருச்சன்னதியின் பின் புலத்தில்  சூரியன் மறைந்த காட்சியை காணுகி்ன்றீர்கள் அன்பர்களே.

இது போல சில தலங்களிலும் குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் மற்றும் சந்திர பூஜை நடைபெறுகின்றது அவையாவன:

காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் பங்குனி மாதம் காலை மூன்று நாட்கள் சூரிய பூஜை.

நவக்கிரக ஸ்தலங்களுள் சந்திரனின் தலமான திங்களூரில் பங்குனி உத்திரத்தன்று காலை சூரிய பூஜை, மறு நாள் இரவு சந்திர பூஜை.

எண்கண் முருகனின் ஆலயத்தில் பங்குனி காலை சூரிய பூஜை.

பாண்டிக்கொடுமுடியில் பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் சூரிய பூஜை.

திருநெடுங்களத்தில் ஆடி மாதம் காலை சூரிய பூஜை.

தை மாத இரத சப்தமியன்று காஞ்சிபுரம் ஏலவார் குழலி அம்மையை சூரியன் தொழுகின்றான்.

திருவேதிக்குடியில் பங்குனி காலை சூரிய பூஜை.

லலிதாபாள் அருள் பாலிக்கும் திருமீயச்சூரில் சித்திரை 21 முதல் 27 வரை காலை சூரிய பூஜை.

தொண்டை மண்டல ஞாயிறு தலத்தில் சித்திரை மாதம் சுவாமி மற்றும் அம்பாள் சூரிய பூஜை.

திருநாகேஸ்வரத்தில் கார்த்திகை பௌர்ணமியன்று பிறையணி நுதல் அம்மை சந்திர பூஜை கண்டருளுகிறாள்.

அன்னாபிஷேக தினமான ஐப்பசி பௌர்ணமியன்று குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை அன்னாபிஷேகத்தில் சந்திரன் பூஜை செய்யும் கோலத்தை காணலாம்.

முடிந்த அன்பர்கள் இத்திருக்கோவில்களில் சென்று சூரிய பூஜை, சந்திர பூஜை காலங்களில் சென்று  இறைவனையும், இறைவியையும் வழிபட்டு நல்லருள் பெறுங்கள். 
Monday, July 29, 2013

I am a Nationalist

I am a Patriot; I am a Nationalist; I am born Hindu     - Narendra Modi, CM Gujarat, July 2013


There is a hundred Percent Patriot;
Hundred Percent Nationalist; Hundred Percent Hindu
And

A three-hundred per cent ‘I’

Saturday, January 26, 2013

800 வது பதிவு ...குடியரசுதினம் ...http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_26.html


animated gifanimated gifanimated gifவது பதிவு
Yes, ladies and gentlemen. After all those years of experimenting and trying, the Brits have found a way to set rain on fire
File:India Map Animation Created by samnad.s Kudappanamoodu.gif

26 january Republic day 2013

உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது  பெருமை தருகிறது. குடியரசு என்பதற்கு, மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன்தான் மிகச்சரியாகஇலக்கணம் வகுத்தார். 

அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் "மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு' என்று அவர் ரத்தினச் சுருக்கமாக  அளித்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.

 குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் 
தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. 

Saturday, January 19, 2013

இது போதை ஏற்றும் நேரம்! நடிகை திரிஷா!


Jan 18: சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா இந்த காலத்து பெண்கள் மது அருந்துவது சரியா? தவறா என்ற கேள்விக்கு, அது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

சிந்திக்கவும்: சினமா நடிகை குஸ்பு கற்பு குறித்து பேசி தமிழ் நாட்டு பெண்களிடம் செருப்படிபட்டார். தங்களை போல் எல்லோரும் ஆக வேண்டும் என்பதே இந்த நடிகைகளின் கவலை. அதனால் அடிக்கடி இதுபோன்ற சமூக சீர்திருத்த கருத்துக்களை இலவசமாக அள்ளி கொடுப்பார்கள். எப்படி கவர்ச்சியை தாராளமாக காட்டி வியாபாரம் செய்கிறார்களோ அதுமாதிரி.
 
சமீபத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான நைஜீரிய வாலிபர் ஒருவரிடம் இவரது செல்போன் நம்பர் இருந்ததாக செய்திகள் வெளியானது இதை மறுத்த இவர் இந்த தகவல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். ஆனால் பின்னர் இவர் அந்த நைஜீரிய வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.
 
இவரை போன்ற ஒரு நடிகைகள் கூட்டம் இருக்கின்றது, அவர்கள் பப்பு, பார்டி என்று குடித்து கும்மாளம் அடிக்கும் ரகம். மது அருந்துவது சரியா? தவறா? என்றால் தவறு என்றே சொல்ல வேண்டும். தான் குடிப்பதற்காக அது அவரவர் சொந்த விஷயம் என்று மதுவுக்கு பொது அங்கீகாரம் கொடுக்க நினைப்பது வெறுக்க தக்கது. திரிஷா எக்கேடு கெட்டும் போகட்டும் நமக்கு கவலை இல்லை.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளம், தெலுங்கு நடிகர் பிரபாசுடன் மிட்நைட் பார்ட்டி, போதை பொருள் கடத்தும் நைஜீரியா வாலிபருடன் நெருக்கம் இதுவெல்லாம் அவர் சொந்தா விஷயம் இதில் யாரும் தலையிட வில்லை. மற்ற பெண்கள் குடிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி இவரது கருத்தும், அங்கீகாரமும் யாருக்கும் தேவையில்லை.
 
மதுவை ஒழிக்க சமூக சிந்தனையாளர்கள் தீராது பாடுபட்டு வரும் வேளையில், மதுக்கடைகளை தமிழகத்தில் ஒழித்து பூரண மதுவிலக்கை அமுல்படுத்த பல கட்சிகள், அமைப்புகள்  போராட்டங்கள் நடத்தும் இந்த வேளையில் திரிஷாவின் இந்த கேவலமான பேட்டி வன்மையாக கண்டிக்கத்தக்கது.

visit: www.sinthikkavum.net

இந்தியா உலகின் 3 வல்லரசாகுது!

Jan 19: சாமியோ நல்ல காலம் பொறக்க போது!இந்தியா 2050ல் உலகின் 3 வது  பெரிய வல்லரசாக போகுது! நம்புங்கள் சாமியோ!... டும்.. டும்... டும்.

லண்டனை தலைமையகமாகக் கொண்ட PWC என்ற நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கை ஒன்றில் 2050ம் ஆண்டில் உலகின் பொருளாதார மையமாக, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா விளங்கும். இரண்டாவதாக  அமெரிக்காவும், மூன்றாவதாக இந்தியாவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிந்திக்கவும்: முன்பு உலக அழகி போட்டிகளில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கும். சமீப காலமாக உலக அழகிகள் பட்டம் இந்தியாவுக்கு கிடைகிறது. இந்தியாவின் மிக பெரிய சந்தையை பிடிக்க கார்பரேட் கொள்ளைகாரர்கள் போடும் பிட்ச்சை தான் இதுவெல்லாம்.

அதுபோல்தான் இப்பொழுதும் 2050 ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசாகும் என்கிற பித்தலாட்டமும். இப்படி சொன்னால்தானே வால்மார்ட் போன்ற கார்பரேட் கொள்ளையர்கள் இலகுவாக நுழைய முடியும். இந்த வெத்து அறிக்கையை தூக்கி பிடித்துதானே பொருளாதார புளி ( லி போட்டால் புலிக்கு அவமானம்) மண்ணு மோகன் சிங் அணு உலைகளாக கட்டி தள்ள முடியும்.

தடையில்லாத மின்சாரத்தை மானியத்தில் கொடுத்தால்தானே வெளிநாட்டு கம்பனிகள் எல்லாம் இந்தியாவுக்கு வரும். இந்த கம்பனிகள் இந்தியாவுக்கு வந்து, அவர்கள் இங்கே பொருட்களை தயாரித்து இந்தியாவை முன்னேற்ற போகிறார்கள். 2050க்குள் இந்தியாவின் சுற்றுப்புற சுகாதாரத்தை நாசமாக்கி, விவசாயம் மற்றும் இயற்க்கை வளங்களை அழித்து இந்தியாவை குப்பை கூடையாக மாற்றி விட்டு போய் விடுவார்கள்.

உலகின் நம்பர் 1 குப்பை கூடையாக சீனாவும், இரண்டாவதாக இந்தியாவும்  மாறப்போகிறது. அமெரிக்கா உண்மையான வல்லரசாக விளங்கும் சீனாவும், இந்தியாவும் உலகத்திற்கே சிறந்த குப்பை கூடைகளாக மாறி போகும். அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவும் கேடு விளைவிக்கும் அனைத்து தயாரிப்புகளையும் சீனா, இந்தியா போன்ற குப்பை கூடை நாடுகளிடம் கொடுத்து விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்வார்கள். தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வார்கள். எனவே அவர்கள்தானே உண்மையான வல்லரசு.

நான் இந்த மண்ணு மோகன் ஐயா! மா.திரி பொருளாதாரமும் படிக்கல, நம்ம அணு குண்டு ஐயா! அபுல்கலாம் மாதிரி விஞ்சானமும் படிக்கல இருந்தாலும் இந்த மர மண்டைக்கு இப்படித்தான் நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

*மலர் விழி*

சஞ்சீவி தாங்கிய சிரஞ்சீவி

http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_19.html


indian god wallpaper. Hanuman Wallpapers,Pictures

உலகம் யாவையும் தாமுளவாக் கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே


ஆஞ்சனேயர் ரகுவம்ச ரட்சகன்  எனத்திகழ்கிறார் ..  

அசோக வனத்தில், இராவணனின் இம்சை பொறுக்காத சீதை தன்னை மாய்த்துக் கொள்ள முயல, அப்போது அங்கு வந்த அனுமன் ராமனின் கணையாழியைக் காட்டி சீதை ஆவி காத்த உத்தமர் அனுமன் ...
யுத்தத்தின்போது மேகநாதனான இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மூர்ச்சை யடைந்ததுகண்ட ராமர், "எது போனாலும் நான் கவலைப்படமாட்டேன். ஆனால் உன்னைப் பிரிந்திருக்க முடியாது' எனக் கூறி உயிர்விடத் துணிந்தபோது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வந்து இலக்குவணனைப் பிழைக்க வைத்து ராமரையும் காப்பாற்றினார்.