Wednesday, August 14, 2013

ஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு




ஆயிரமாவது பதிவு ....



 photo SHIVA_FAMILY_by_VISHNU108.gif



நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்த விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குகிறது.

விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார் ..எனவே பொருளுணர்ந்து சொல்லிப் பலனடைவோம் ..

நம் அனுபவங்கள் கூடக்கூட வயது ஏற ஏற பொருளும் அதற்கேற்றபடி மெருகேறும் அற்புதத்தை உணரலாம் ..!

அற்புதம் நின்ற கற்பகக் களிறாய் ’ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை  வழிபட்டு உய்வதற்காகவும்  அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளிய  விநாயக வடிவம் திருவருளால் மட்டுமே நிகழ்வது.....!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெய்வீக பதிவர் ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தெய்வீக பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.