







குளத்தில் சோப்பு, ஷாம்பு உபயோகிக்கத் தடையிருப்பதால், தூய்மையாக இருக்கிறது. உடை மாற்றும் அறைக்குச் சற்று கீழ் படிகள் சென்றால் கோவிலை அடையலாம்.

சுவாதிஸ்டானச் சக்கரத்திற்குச் சற்று கீழே மூலாதாரம் அமைந்திருப்பதைப் போல் சின்னஞ்சிறு காடம்புழேஸ்வரி அம்மன் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

தேங்காய் பிரார்த்தனை பிரதானமாம். பிரார்த்தனை சீட்டு வாங்கிக் கொண்டு தேங்காய் வாங்கிவர வெளியில் வந்தோம்.

தேங்காய் பிரார்த்தனை பிரதானமாம். பிரார்த்தனை சீட்டு வாங்கிக் கொண்டு தேங்காய் வாங்கிவர வெளியில் வந்தோம்.
ஆடி பண்டிகையில் சுடுவதற்காக மணல் போட்டு உரசி பிசிறு நீக்கி வைத்திருப்பது போல் அத்தனை அழகாக உரித்து வைத்திருந்தார்கள். ஏதேனும் இயந்திரத்தில் தேய்த்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம்.
இல்லையாம். கையாலேயே உரித்து தேய்த்து வைத்திருக்கிறார்களாம்.
நேந்திரன் பழ பஜ்ஜி,
புட்டு கொண்டைக்கடலைக் குழம்பு

என்று கேரள மண்ணுக்கே உரிய உணவு சாபிட்டு,
கட்டஞ்சாயா என்ற பால் கலக்காத தேனீர் சுவைத்துவிட்டு, தேங்காய்கள் வாங்கிக் கொண்டு வந்தோம்.
பூஜை செய்து கொடுத்த காய்களை அதற்கு உரிய கூண்டில் உடைத்துத் தருகிறார்கள். பிரியப்பட்டால் வீட்டிற்கு எடுத்து வரலாம். அதற்கான பெட்டியிலும் செலுத்தி விடலாம்.
செலுத்தப்பட்ட காய்களை தனி அறையில் ஹோமத்தில் சேர்கிறார்கள். சாட்சாத் பரசு ராமரின் தோற்றத்தில், பரசுராம ஷேத்திரத்தில் நடை பெறும் இந்த யாகப்புகை இனிய மணத்துடன் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றதாம்.

Kadampuzha Thrikkarthika

குளத்திலிருந்து வழியும் நீர் கோவிலைச் சுற்றி சிறு ஓடையாக ஓடி தொட்டியில் சேருகிறது. குளத்திற் குள்ளேயும், அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் சிறிய மலையிலும் நீர் ஊற்றுகளுடன், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. சுற்றிலும் பச்சை மரங்கள், கொடிகள், பூச்செடிகள், என்று சேர நாட்டிற்கு இயற்கை ரொம்ப ஓவராகத்தான் ஓரவஞ்சனையுட்ன் அழகை வாரி வாரி வழங்கியிருக்கிறது.





kadampuzha temple road

2 comments:
அழகான, சிறிய கோவில் மாதிரி தெரிகிறது. நிம்மதியாக, மனது ஒன்றி தரிசனம் செய்யலாம்.
காடம்புழா எங்கு உள்ளது என்று தெரிவித்தால் செல்வதள்கு வசதியாய் இருக்கும்.
@ DrPKandaswamyPhD said...//
மிக அழகான கோவில்.
நாங்கள் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் முன்புறம் இயங்கி வரும் சுஜாதா டிராவல்ஸ் மூலம் சென்றுவந்தோம்.
இரவு பத்துமணிக்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்து காலை இரண்டரை மணிக்கு காடம்புழா கோவில்.
இன்னும் நான்கு கோவில்கள். இறுதியாக சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் குருதி பூஜை. அலறலும் ஆட்டமுமாக பயமாக இருந்தது.
வசதியாக வழிகேட்கும் அவசியமில்லாமல் நிறைவாக பயணம் இனிமை.
Post a Comment