Saturday, August 27, 2011

விளையாட்டு.......


விளையாட்டு......







இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ??
ஆம் “ஹாக்கி” எனப்படும் “ வளைதடிப் பந்தாட்டம்.”

ஹாக்கியை தவிர பல விளையட்டுகள் இந்தியாவில் விளையாட படுவது நாம் எல்லோரும் அறிந்ததே.

ஆனால்....

விளையாட்டு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கிரிகெட் மட்டுமே.யாரைப்பார்த்தாலும் கிரிகெட் பற்றியே பேச்சு.தினசரி செய்தி பத்திரிக்கையில் பெருமளவு பகுதி கிரிகெட்டுக்கே ஒதுக்கப்படுவது என்று இந்தியாவின் தேசிய விளையாட்டை மாற்றிவிட்டார்களே என்று எண்ண வைக்கும் அளவுக்கு அதற்கு முக்கியத்துவம்.

இதை தவிர கிரிக்கெட் வீரர்களுக்கு விளம்பரங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.அவர்களை தவிர ஏதோ ஒன்றிரண்டு வேறு விளையாட்டு வீரர்களே விளம்பரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த மாதிரி கிரிக்கெட்டுக்கு முக்கியதுவம் கொடுத்துவிட்டு அவர்கள் நன்றாக ஆடி ஜெய்க்கும் பொழுது அவர்களை தலையில் தூக்கி உட்காரவைத்துக்கொண்டு வாழ்த்துவது! அவர்கள் சரியாக ஆடவில்லை என்றால் கீழே தள்ளி விமர்சிப்பது என்பதும் எனக்கும் சரியாக படவில்லை.(சே.குமார் சொல்லியிருப்பது போல்.)





100 கோடிக்கும் மேலான ஜனத்தொகை கொண்ட நாட்டில் எத்தனையோ1000 விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும்.தேசிய விளையாட்டான ஹாக்கி,மற்றும் தடகள விளையாட்டுகள்,நீச்சல்விளையாட்டுகள்,டென்னிஸ்,பேட்மிட்டன், கால் பந்து,கூடை பந்து,வாலிபால்,துப்பக்கி சுடுதல்,மேலும் பல.....இவற்றில் யாராவது ஜெயித்து பதக்கம் பெறும்போது மட்டுமே பத்திரிக்கை செய்திவரும். மற்ற சமயங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறதா என்று கூட நமக்கு தெரியாது.




சரி கடந்த வருடம் காமன்வெல்த்      விளையாட்டு போட்டிகள் நடந்ததே என்றால் அது ஆரம்பிப்பதற்கு முன்னும், நடந்து முடிந்த பிறகும் நடந்த கூத்து நாடறிந்ததே..

 விளையாட்டுகளில் போட்டி இருக்கலாம்.அது ஆரோகியமானதுதான். ஆனால் நம் நாட்டில் ஊழல் செய்வதில்தான் போட்டி இருக்கிறது.

Akhil Kumar Akhil Kumar of India in action against Louis Julie of Mauritius during the Bantamweight 54 kg Gold Medal Bout during the boxing at the Melbourne Exhibition Centre during day ten of the Melbourne 2006 Commonwealth Games March 25, 2006 in Melbourne, Australia.
குத்துச்சண்டை வீரர் அகில் குமார்.காமன்வெல்த் போட்டிகளின் போது.
தீபிகா குமாரி..காமன்வெல்த் போட்டிகளின் போது



நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டி வீரர்கள்.
மேலே குறிப்பிட்டு உள்ளவர்கள் நம் நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே. இந்த மாதிரி இன்னும் பல 100 வீரர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் திறமையை கண்டுபிடித்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் ஒலிம்பிக்ஸ் மற்றும் பல பன்நாட்டு விளையாட்டு போட்டிகளில் இந்தியாவே முன்னனியில் இருக்கும். அதைவிட்டு விட்டு ஊழல் செய்து கொண்டிருந்தால் அந்த வீரர்களும் ஊக்க மருந்தை உபயோகித்து குறுக்கு வழியில் மேலே வர முயற்சி செய்கிறார்கள்.

கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டுதான் ஆனால் அதற்கு தரப்படும் ஆதீத முக்கியத்துவத்தை குறைத்து மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியவத்துவம் தர வேண்டும் என்பதே தாழ்மையான கருத்து.
------------------------------------------------------------------------------------------------------------

7 comments:

rajamelaiyur said...

நம்மை ஆளுங்க உழலையே விளையாட்டா பண்ணுவாங்க

rajamelaiyur said...

நல்ல பதிவு

RAMA RAVI (RAMVI) said...

நன்றி ராஜா. தங்களின் அன்பான கருத்துக்கு.

Chitra said...

Thank you for visiting my blog and for the encouraging comment. :-)

காந்தி பனங்கூர் said...

சீனாவைப் பார்த்து பயப்படாமல் திருந்தினாலே போதும் நம் நாடு முன்னேறுவதற்கு. அருமையான பதிவு.

RAMA RAVI (RAMVI) said...

//Chitra said...
Thank you for visiting my blog and for the encouraging comment. :-)//

நன்றி சித்ரா..

RAMA RAVI (RAMVI) said...

// காந்தி பனங்கூர் said...
சீனாவைப் பார்த்து பயப்படாமல் திருந்தினாலே போதும் நம் நாடு முன்னேறுவதற்கு. அருமையான பதிவு.//

வணக்கம் காந்தி பனங்கூர்.
தங்களின் கருத்துக்கு நன்றி.