Sunday, August 28, 2011

கெளரி கணேஷா.....


கெளரி கணேஷா.....

நாங்கள் இருக்கும் பெங்களூரில் விநாயக சதுர்த்தி விழா கணேஷ சதுர்த்தி என்கிற பெயரில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

10 வருடங்களுக்கு முன் நாங்கள் பெங்களூருக்கு வந்த புதிதில், நாம் தமிழ் நாட்டில் கொண்டாடும் பிள்ளையார்/விநாயக சதுர்த்தி விழாவை, இங்கு கணேஷ சதுர்த்தி என்கிற பெயரில் கொண்டாடுவதை பற்றி தெரிந்து கொண்டேன்.

இங்கு இப்பண்டிகை 2 நாட்கள் கெளரி கணேஷா பண்டிகை என்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகை வருவதறக்கு முன்னதாகவே ஊர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பிள்ளையார் சிலைகள்தான் பல அளவுகளில்,பல நிறங்களில்....








முதல் நாள் கொண்டாடப்படும் கெளரி பூஜை சுவர்ண கெளரி விரதம்என்றும் அழைக்கப்படுகிறது. விநாயக பெருமானின் தாயாரான பார்வதி தேவிக்காக கொண்டாடப்படும் இவ்விரதம் பெண்களால் கொண்டாடப்படுகிறது.
மஞ்சள் பொடியில் நீர்சேர்த்து கலந்து கெளரி உருவம் செய்து வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.சில வீடுகளில் கெளரி உருவச்சிலைகளும் வைத்து வழிபாடு நடத்தப்படும் வழக்கம் உண்டு.

மறுநாள் கணேஷ புஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.நம் ஊரில் உள்ள வழக்கப்படியே ஒவ்வொரு வீடுகளிலும் விநாயகரின் உருவச்சிலை வாங்கி வைத்து வெற்றிலை பாக்கு,பூ,பழங்கள் மற்றும் விநாயக சதுர்த்தியன்று செய்யப்படும் கொழுக்கட்டை,ஒப்பட்டு எனப்படும் போளி ஆகியவை நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.

வீட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவதுடன்,இவ்விழாவை ஒவ்வொரு பகுதியிலும் அங்கு வசிக்கும் மக்கள் ஒன்றாக சேர்ந்தும்,வீதிகளில் பெரிய விநாயகர் சிலை வைத்தும் கொண்டாடுகிறார்கள். இதற்காக ஒரு மாதம் முன்னதாகவே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதி மக்களிடம் நன்கொடை வசூலிக்கிரார்கள். நன்கொடையில் கிடைக்கும் பணத்தை கொண்டு பண்டிகைக்கு 2/3 நாட்களுக்கு முன்னதாக பெரிய அளவில் பந்தல் அமைத்து பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வாங்கிவந்து வைத்து 10/12 தினங்களுக்கு பூஜைகள் நடத்துகிறார்கள்.



சில பகுதிகளில் பாட்டு கச்சேரி, நாடகம் போன்றவையும் நடத்தப்படுவதுடன்,சிறுவர் சிறுமிகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகளும் கொடுக்கிறார்கள்.


10 நாட்கள் பூஜை முடிந்த பிறகு மேளதாளத்தோடு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஊரை சுற்றியுள்ள ஏரி குளங்களில் முழுகச்செய்துவிட்டு வருகிறார்கள்.





மிகச்சிறப்பாக பெரிய அளவில் கொண்டாடப்படும் இவ்விழா மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவதாக இருக்கிறது.

23 comments:

ஸ்ரீதர் said...

மிகவும் நல்ல தகவல்.நன்றி!

காட்டான் said...

மிக நல்ல தகவல் மாப்பிள.. ஆனா இவர்கள் கொண்டுபோய் கரைக்கும் விநாயகர்கள் எதனால் செய்யப்பட்டவை... இல்ல தெரியாமதான் கேட்கிறேன் இதனால் நீர் நிலைகளுக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே மாப்பிள..??


காட்டான் குழ போட்டான்..

ரைட்டர் நட்சத்திரா said...

பதிவிட்டதற்கு நன்றி

RAMA RAVI (RAMVI) said...

// ஸ்ரீதர் said...
மிகவும் நல்ல தகவல்.நன்றி!//

நன்றி.ஸ்ரீதர்.

RAMA RAVI (RAMVI) said...

காட்டான் said...
//மிக நல்ல தகவல் மாப்பிள.. ஆனா இவர்கள் கொண்டுபோய் கரைக்கும் விநாயகர்கள் எதனால் செய்யப்பட்டவை... இல்ல தெரியாமதான் கேட்கிறேன் இதனால் நீர் நிலைகளுக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே மாப்பிள..??


காட்டான் குழ போட்டான்..//

நன்றி காட்டான் தங்களின் கருத்துக்கு....ராம்வி(ரமாரவி)

RAMA RAVI (RAMVI) said...

//கார்த்தி கேயனி said...
பதிவிட்டதற்கு நன்றி//

நன்றி கார்த்தி கேயனி..

பித்தனின் வாக்கு said...

good article with nice photos. thanks for sharing

RAMA RAVI (RAMVI) said...

// பித்தனின் வாக்கு said...
good article with nice photos. thanks for sharing//
நன்றி பித்தன், தங்களின் கருத்துக்கு.

அம்பாளடியாள் said...

மிகவும் அருமையான தகவல் சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

RAMA RAVI (RAMVI) said...

// அம்பாளடியாள் said...
மிகவும் அருமையான தகவல் சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .//

தங்களின் கருத்துக்கு நன்றி அம்பாள்டியாள்.

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர் சிலைகள். சூப்பர் படங்கள். தண்ணிக்குள் போடும் விநாயகர் உண்மையான கல் சிலைபோல இருக்கே? அதையா தண்ணியில் போடுவார்கள்?. சந்தனச் சிலையைத்தானே கரைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

RAMA RAVI (RAMVI) said...

//athira said...
சூப்பர் சிலைகள். சூப்பர் படங்கள். தண்ணிக்குள் போடும் விநாயகர் உண்மையான கல் சிலைபோல இருக்கே? அதையா தண்ணியில் போடுவார்கள்?. சந்தனச் சிலையைத்தானே கரைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

நன்றி ஆதிரா தங்களின் கருத்துக்கு.

சாதாரணமாக சிலைகள் களிமண்ணினால் செய்யப்பட்டிருக்கும் அதை தண்ணீரில் கரைப்பது எளிது.
இப்பொழுதேல்லாம் வேறு பொருட்களை கொண்டு செய்கிறார்கள்.அதனால் கேடுதான் ஜாஸ்தி ஆகிறது.

K said...

10 நாட்கள் பூஜை முடிந்த பிறகு மேளதாளத்தோடு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஊரை சுற்றியுள்ள ஏரி குளங்களில் முழுகச்செய்துவிட்டு வருகிறார்கள்.////

அட கடைசியில் இப்படியா? அப்படியானால் இதனால் பொருட்செலவுகள் உண்டாகுமே!

விழாவை சிறப்பாக கொண்டாடிவிட்டு சிலைகளைப் பத்திரமாக வைத்திருக்க முடியாதா?

RAMA RAVI (RAMVI) said...

வாங்க ஐடியா மணி,உங்க கருத்துக்கு நன்றி..

அம்பலத்தார் said...

நம்ம பாரம்பரியங்களை அடுத்த சந்ததியினரும் அறிந்துகொள்ளும்விதமான உங்கள் பதிவுகளிற்கு வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அருமையா தகவல்கள்... பகிர்விற்கு நன்றி...

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

நீங்களும் பெங்களூர் தானா? மகிழ்ச்சி...

RAMA RAVI (RAMVI) said...

// அம்பலத்தார் said...
நம்ம பாரம்பரியங்களை அடுத்த சந்ததியினரும் அறிந்துகொள்ளும்விதமான உங்கள் பதிவுகளிற்கு வாழ்த்துக்கள்//

நன்றி அம்பலத்தார்,தங்களின் அன்பான கருத்துக்கு..

RAMA RAVI (RAMVI) said...

// Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
அருமையா தகவல்கள்... பகிர்விற்கு நன்றி...

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

நீங்களும் பெங்களூர் தானா? மகிழ்ச்சி...//

நன்றி வாசன், தங்களின் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும்.
ஆம், பெங்க்ளூர்தான்...

CS. Mohan Kumar said...

தங்களின் இந்த பதிவு மூலம் பெங்களூரில் எப்படி சதுர்த்தி கொண்டாடுகிறார்கள் என அறிய முடிந்தது. நன்றி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// நன்றி வாசன், தங்களின் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும்.
ஆம், பெங்க்ளூர்தான்... //

மிக்க நன்றி மறுமொழிக்கு....

Anonymous said...

பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி ...Nice...

ரமாரவி...இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

RAMA RAVI (RAMVI) said...

// மோகன் குமார் said...
தங்களின் இந்த பதிவு மூலம் பெங்களூரில் எப்படி சதுர்த்தி கொண்டாடுகிறார்கள் என அறிய முடிந்தது. நன்றி//

நன்றி மோகன் குமார் தங்களின் கருத்துக்கு.

RAMA RAVI (RAMVI) said...

// ரெவெரி said...
பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி ...Nice...

ரமாரவி...இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்//

நன்றி ரெவெரி கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்