Friday, September 2, 2011

தமிழன் என்று சொல்லடா.......











புதியதாக குடியேறிய குடியிருப்பில் பக்கத்தில் உள்ளவர்களிடம் அறிமுக படுத்திக்கொண்டோம்.அவர்கள் கன்னடகாரர்கள்.

 குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி பேச்சு வந்த பொழுது அவர் :
 “எங்களுக்கு உங்க மாதிரி தமிழ் பேசுபவர்கள்தான் நிறைய நண்பர்களாக இருக்காங்க,என் கணவர் ----பி.யூ.சி. காலேஜ்ல பிரின்சிபலா இருந்தாரு.கல்லூரியிலும் சரி வெளியேயும் சரி என் கணவருக்கு தமிழ்காரங்கத்தான் அதிக பழக்கம்.என் கணவர் சொல்லுவாரு தமிழ் காரங்க ரொம்ப புத்திசாலி, எனக்கு ஏதாவது பிரச்சனைனாக்க முடிவு எடுக்கும் முன் என் நண்பர்களான தமிழ் காரங்க கிட்ட ஆலோசனை கேட்டுத்தான் எடுப்பேன்னு.”

அப்படி அவர் கூறியது எனக்கு மிக ஆச்சரியமாக போய்விட்டது,பெங்களூரில் இப்படி தமிழர்களுக்கு ஆதரவு தருபவர் இருக்கிறாரா என்று?

அவர் , தொடர்ந்து, “35 வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய பெரிய மகன் பிறந்த சமயம் எனக்கும் ,என் கணவருக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றி தகராறு ஏற்பட்டது. குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார்,அதனால் அவருடைய பெயரான ‘சங்கரன்’ வைக்க வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருக்க,தன்னுடைய தாத்தா பெயரான ‘ நாகலிங்கம்’ என்று வைக்க வேண்டும் என்று என் கணவரும் பிடிவாதம் பிடிக்க இருவரும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்.



 குழந்தை பிறந்ததை கேள்விபட்ட ஒரு தமிழ் நண்பர் குடும்பத்துடன் பார்க்க வந்தார்.எங்க வாக்குவாதத்தை பார்த்து பிரச்சனை என்ன என்று அவர் கேட்க,நாங்க விஷயத்தை சொன்னோம். அதுக்கு அவர் இதுக்கு போயா சண்டை போடரீங்க? பேசாம ‘சங்கரலிங்கம்’என்று வைத்துவிடுங்கள்.இரண்டு பெயரும் வந்து விட்டது அவரவர் இஷ்டப்படி சங்கரன் என்றும் லிங்கம் என்றும் கூப்பிட்டு கொள்ளலாம் என்றார்.அவர் உடனடியாக எங்க பிரச்சனைக்கு தீர்வு சொன்னது எங்களுக்கும் பிடித்தது அப்படியே வைத்து விட்டோம்.அவரது யோசனையினால் எங்களுக்குள் சண்டை தீர்ந்தது. அப்பத்தான் என் கணவர் சொன்னார், பார்த்தையா? தமிழர்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என்று,புத்திசாலிகள்,அதனால்தான் என் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் போது நான் எப்பவும் அவர்களிடம் உதவி கேட்பேன் ”

 என்று சொன்னவர் மேலும் தொடர்ந்து, “இது ஒரு உதாரணம்தான், இந்த மாதிரி நிறைய விஷயங்களில் எங்க நண்பர்களிடம் கேட்டுதான் என் கணவர் முடிவு எடுப்பார் பெரும்பாலும் முடிவுகள் எங்களுக்கு நன்மையைதான் தந்திருக்கிறது.”என்று கூறி என்னை ஆச்சரியத்தில் பேசமுடியாமல் செய்தார்.


                                     




 கன்னடகாரர்கள் தமிழர்களை விரோதியாக பார்ப்பார்கள்,அவர்களை தமிழ்நாட்டுக்கே ஓட்டிவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம்தான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் கடந்த 10 வருடங்களில் எனக்கு அம்மாதிரி எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்பட்டதில்லை.என்னை பொருத்தவரையில் கன்னடகாரர்கள்,மிகுந்த தெய்வபக்தி மிக்கவர்கள்,மரியாதை தெரிந்தவர்கள்.ஆனால் அவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிரார்களோ தெரியாது.

இந்த பெண்ணும் அவர் கணவரும் தமிழர்களை பற்றி பேசுவதை கேட்டவுடன் என்னுடைய பெருமைக்கும், சந்தோஷத்திற்கும் எல்லையே இல்லை..

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....................


5 comments:

kowsy said...

கன்னடகாரர்கள் தமிழர்களை விரோதியாக பார்ப்பார்கள்,


மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் அனைத்துக் குணமும் இருக்கின்றது. உங்கள் அநுபவமே எதையும் தீர்மானிக்கும் பகிர்வுக்கு வாழ்த்துகள்.

RAMA RAVI (RAMVI) said...

//சந்திரகௌரி said...
கன்னடகாரர்கள் தமிழர்களை விரோதியாக பார்ப்பார்கள்,


மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் அனைத்துக் குணமும் இருக்கின்றது. உங்கள் அநுபவமே எதையும் தீர்மானிக்கும் பகிர்வுக்கு வாழ்த்துகள்.//

நன்றி சந்திரகெளரி தங்களின் அன்பான கருத்துக்கு..

Muruganandan M.K. said...

நல்ல உணர்வுள்ளவர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்பதை அழகாகக் கூறினீர்கள்.

RAMA RAVI (RAMVI) said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல உணர்வுள்ளவர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்பதை அழகாகக் கூறினீர்கள்.//

நன்றி சார், தங்களின் அன்பான கருத்துக்கு.

தமிழ் வண்ணம் திரட்டி said...

திரட்டியில் இணைக்கும் முறை
இந்த முறையில் இணைந்தால் உங்கள் தளத்திற்கும் traffic கூடும்.