Monday, October 3, 2011

நவராத்திரி நாயகி அன்னை மீனாக்ஷி




வேதமாகிய கதம்பவனத்தில் கிளியாகவும், 
சாஸ்திரமாகிய காட்டில் மயிலாகவும், 
உபநிஷத்களிலுள்ள ஸமஸ்த தர்மங்களாகிற பொற்றமரைக் குளத்தில் ஹம்ஸமாகவும், 
பிரணவமாகிற தாமரைப்பூவில் கருத்த மதம் கொண்ட தேன் வண்டாகவும், 
மந்திரமாகிற மாமரக் கிளைக்கு கோகிலமாகவும் விளங்கிக் கொண்டு சுந்தரேஸ்வரரின் சக்தியாக, மதுரையின் நாயகியாய், பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான அன்னை மீனாக்ஷி சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடையுடுத்து பொற்றாமரைக்குளத்தருகில் கோவில் கொண்டு ஆட்சிபுரியும் மதுரையில் நவராத்ரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

4 comments:

கால்நடை மருத்துவர் பக்கம் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு! நன்றி!!பண்ணாரி மாரியம்மனை பற்றி பதிவு போடுங்களேன்!

Unknown said...

அருமையான வருணனை! அது தானே உண்மையும் கூட... அற்புதமாகவும் எழுதியுள்ளீர்கள்.
இந்த பிரபஞ்சத் தலைவன் பரபிரம்மம். அதாவது இந்த பிரபஞ்சத்தின் மனம் அவன். அவனின் ஆக்கம் அனைத்தின் இயக்கம் இவள். அவனில் இருந்தே வெளிபட்டே அவனுள் அடங்குபவள். அவளே சக்தி, அவளே இயக்கம், அவளே பெண்ணின் சொரூபம். அன்னை மீனாக்ஷி (என்னை ஈன்றவளும் அவளே) அவளே நம்மை அந்தப் பேரொளியில் கலக்க அழைத்துச் செல்பவள் என்பான் மகாகவி சுப்ரமணிய பாரதி. பெற்றவள் அவள் நம்மை பேணு பவளும் அவளே. உற்றக் குறை ஒரு கொடியாயினும் அதனை மறந்தே அன்போடு அணைக்கும் அன்னை அவள் திருப்பாதம் போற்றும் அற்புதப் பதிவு.

நன்றிகள் சகோதிரி!..

அன்புடன்,
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.
http://tamizhvirumbi.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc; said...
சரியான நேரத்தில் சரியான பதிவு! நன்றி!!பண்ணாரி மாரியம்மனை பற்றி பதிவு போடுங்களேன்!/

கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

விரைவில் பண்ணாரி அம்மனைப் பற்றி எழுதுகிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் விரும்பி said.../

மனம் நிறைந்த அருமையான சிறப்பான கருத்துரைக்கு மிகவும் நன்றி ஐயா.