சமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சித் தொடர் மாதவி. அந்தத் தொடரில் கதாநாயகி மாதவியே இறந்துவிட்டதாகக் கதை பின்னினார்கள். பிறகு இரண்டாம் கதாநாயகியான அருணா மலையிலிருந்து விழுந்து விட்டதாகவும் மலையடிவாரத்தில் பல இடங்களில் தேடியும் அவரோ அவரது உடலோ கிடைக்கவில்லை என்று சொல்லி கதையை வளர்த்தார்கள்.
அதேபோல தங்கபாண்டியன் இறந்து போனதாகச்சொல்லி சில நாட்கள் கழித்து அவர் இறக்கவில்லை என்று சொன்னார்கள். திரும்ப அருணாவைக் காணவில்லை என்று சொல்லி அவரது உடல் மருத்துவ மனையில் இருப்பதாகச் சொல்லி அவரது அம்மாவும் அப்பாவும் மருத்துவ மனைக்குச் செல்வதாகக் காண்பித்து பிறகு இறந்தது அருணா இல்லை என்று கதையை திருப்புகிறார்கள்.
ஒருவர் இறந்ததாகக்காண்பித்து அது கனவு என்றோ அல்லது அவர் இறக்கவில்லை என்றோ காண்பிப்பதும் சினிமாவுக்கோ தொலைக்காட்சித் தொடருக்கோ புதிது இல்லைதான். ஆனால் ஒரே கதையில்(ஒரே தொடரில்) இப்படி இவ்வளவு பேர் இறந்ததாகக் காண்பித்து பின்னர் அவர்கள் இறfக்கவில்லை என்று காண்பிப்பது எப்படி நியாயமாகும்?
3 comments:
இன்னுமா இந்த உலகம் இவங்கள நம்புது!!!!!
தமிழ்கிழம் said...
இன்னுமா இந்த உலகம் இவங்கள நம்புது!!!!!
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
ம்ம் சரிதான்
தொலைக்காட்சி சீரியல பார்த்து பார்த்து பார்க்கிறவர்கள் தான் ஒரு சுற்றூ பெருத்து விடுகின்றனர்.
நெடுந்தொடர் ஏன் தான் போடுகிர்|ஆர்களோ
Post a Comment