Saturday, March 17, 2012

சிவம் - லிங்கத் திருமேனி

சிவம் - லிங்கத் திருமேனி

நன்றி - புகைப்படம் உதவி தினமலர்.
"மலர்ந்த  அவன்மால்  உருத்திரன்  மகேசன் 
பலந்தரும் ஐம்முகன் பர விந்து நாதம் 
நலந்தரு சத்தி சிவன்வடி வாகி 
பலந்தரு லிங்கம் பராநந்தி ஆமே"
1. லிங்க மூர்த்தி - திரு இடை மருதூர் எனப்படும் திருவிடை மருதூரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ள மகாலிங்கேசுவரர் ஆலயம். 

" மானுட மக்களிற்கு தாமே லிங்கம் செய்து, பூசை வழிமுறைகளை செய்து காட்ட விரும்பி, சுயம்பு லிங்கமாக தோன்றச் செய்து, காவிரி காருண்ய அமிர்த தீர்த்தத்தில் நீராடி, வில்வ இலையைக் கொண்டு பூசை மேற்கொண்டதாக வரலாறு. "

உடலினிர்க்கு சிரசினுள்ள மூளையே பிரதானம். மூளையின் திறனால், அறிவார்ந்த செயல்களும், அறிவற்ற செயல்களும் மனிதனால் மேற்கொள்ளப் படுகின்றது. 
பிற உயிரனங்களை அழிப்பது, தன் இனத்தினையே திட்டம் இட்டு, வஞ்சனை செய்து அழிப்பது என தீய செயல்வினைகளுக்கும் காரணமாக இந்த மூளையே இருப்பதனால், அதற்க்கு தண்டனையாக, 
மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தரப்படுகின்றது, இதன் விளைவாக, அவன் சித்த சுவாதீனம் இழந்து பிச்சை எடுக்கும் பிட்ச்சாடனாக வாழ 
நேரிடும் என்ற தத்துவத்தினை உணர்த்துகின்றது. 
இந்த ஆலயத்தின் பிரதான நந்தியினைத் தாண்டி உள் நுழைய முற்படும்போது, இடது புறத்தில், பிரம்ம ஹத்தி தோஷம் நீக்க - ஒரு ரூபாய் நாணயத்தினை நமது வலது கையில் எடுத்து  நமது தலையை இட வலமாக மூன்று சுற்று சுற்றி பிரம்ம ஹத்தி திட்டினை நோக்கி எரிந்து விட்டு, கோயிலினுள் நுழைய வேண்டும். 
அடுத்ததாக, நட்ச்ச்சத்திரத்திர்க்கு ஒரு லிங்கமாக பிரதிச்ட்டை செய்யப் பட்டுள்ளது. நாம் பிறந்த நட்ச்சத்திர்க்கு உரிய லிங்கம் முன்பாக ஒரு நெய் அகல் தீபம் ஏற்றி, 3 அகர்பத்திகள் ஏற்றி வழிபட வேண்டும். 
மூலவருக்கு சுவாமி பெயரில் ( தேங்காய் , வில்வம், 6 வாழைப் பழம்,
மஞ்சள்  சாமந்திப் பூ அல்லது முல்லைப் பூ , ஊது பத்தி, நெய் ஆகியன கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

"எத்தனையோ பிறவிகள் எடுத்திருப்பேன். அறிந்தோ, அறியாமலோ, 
எண்ணற்ற உயிரினங்களின் அழிவிற்கு எனது செயல் காரணமாகி இருப்பேன். இதற்க்கு என் செய்து, இப்பழி துடைப்பேன் என்று எளியவனுக்கு தெரியாது. இறைவா, இனி, அறிந்தும் அறியாமலும் இத்தகைய செயல்களை செய்யாதிருக்க உனது அருள் என்னுள் இருக்க வேண்டும். இத்தகைய செயல்கள், எனது வாழ்வினை உருக்குலைக்காதிருக்க, இறைவா நீயே தடுத்து ஆட்கொள்ள வேண்டும். இனி,  இத்தகைய செயல்கள் அறிந்து செய்ய மாட்டேன் என்பதனை உனது சாட்ச்சியாக மேற்கொள்ள மாட்டேன். சீவ காருன்யத்தினை கடைபிடிப்பேன் " என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 
அர்ச்சனைக்குப் பிறகு, 
மூலவரின் முன்பாக உள்ள, நந்தி பகவானின் முன்பாக, 
*
**
***
****
9 நெய் அகல் தீபங்கள் , ஒரு நெய் அகல் தீபம் கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள படி ஏற்றி, வழிபட வேண்டும். அதன் பின் ஆலயத்தினை சுற்றி ( இட வலமாக ) சுற்றி வர வேண்டும். சுற்று சுவரின் பின் சுவற்றில், இரண்டு ஓட்டைகள் இருக்கும். வட திசையில் உள்ள ஓட்டையில், வலது காதினையும், தென் திசை ஓட்டையில் இடது காதினையும் வைத்து 1 லிருந்து 3 நிமிடம் வரை ஒவ்வொரு காதினிலும் வரும் ஓசை கேட்க வேண்டும்.
அடுத்து அம்மனின் தரிசனம். ( குங்கும், சாமந்தி / மல்லிகை புஷ்பம் ) கொடுத்து, அர்ச்சனை செய்து, ஆலயம் வலம் வரவேண்டும். சுற்றுப் பிரகாரத்தில் உள்ள அம்மனின் முன்பாக, திருமணம் நீண்ட நாட்களாக தடையாகி இருக்கும் பெண்கள், மஞ்சள், குங்குமம், அம்மனின் பாதத்தில் வைத்து, வேண்டிக்கொள்ள வேண்டும். 
அதன் பிறகு, ஒவ்வொரு சாமி தரிசனம் முடித்து, 20 நிமிட  நேரம் அமர்ந்து, 21 வது நிமிடம்  வெளியேற வேண்டும். இந்த நேரத்தில், பிரசாதம் சாப்பிடுதல், பேசுதல் கூடாது. ஓம் ராம் எனும் தாரக மந்திரத்தினை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். 
ஓம் நம சிவாய மந்திரம் / சிவாய நம மந்திரம் உச்சரிக்க தகுதி ஏற்படும்  வரை இம்மந்திரம் தான் சிறந்தது.
 ( இறைவன் சந்நிதியில் நுழைந்து, அம்மன் சன்னிதானத்தின் வழியாக வெளியேற வேண்டும்) 
ஆலய தரிசனம் முடிந்த பிறகு, பைரவருக்கு, தயிர் அன்னம் ஒரு இலையில் வைத்து வைக்க வேண்டும். ( காலம் - பைரவர் என கருதி 
நமக்கு நமது ஊழ் வினையில் இருந்து விடுபட காலம் வழிவிட வேண்டும் என்பதற்காக, செய்யப்படுவது. மனம் உருகி வேண்டி வைத்தால் தான் பைரவர் ( நாய் ) வந்து எடுக்கும். இல்லை என்றால், அருகிலே இருந்தால் கூட திரும்பிக் கூட  பார்க்காது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். 
பிச்சை யாருக்கும் இடக் கூடாது. பூசை வீட்டிற்கு வந்து முருகர் படத்தின் முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி, அந்த விளக்கு அணையும் வரை எங்கும் செல்லாமல், பூசை அறையில் இருக்க வேண்டும். காத்திருக்க வேண்டும். அவசரம் கொண்டு செய்வது முழுமை அடையாது. அனைத்து பணிகளும் பூசையின் முறைக்கு ஏற்ப திட்டம் இட்டு செய்ய வேண்டும். முழுமை அடையும் முன்பாக கோயிலின் வாசலில் பிச்சை இடுதல் கூடாது. நவ கிரக வழிபாடு தேவை இல்லை.
இறைவனிடம் மன்றாடுவோம். கிரகம் வழி விடும். 

No comments: