Thursday, September 6, 2012

வரலாறு எங்கும் வீரம்! வீரத்தின் விளைநிலம் ஈழம்!


Sep 05: மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி என்னும் ஊரில் புத்தர் விழா ஒன்று நடைபெற இருக்கிறது. புத்தர் 2060 என்று அழைக்கப்படும் இந்த விழாவுக்கு பயங்கரவாதி ராஜ பக்சேவை அழைத்துவர BJP கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் பெரிதும் முயற்சி செய்கிறார்.

தமிழர் விடுதலை போராளிகளுடன் நேருக்கு நேர் போர்செய்ய தைரியம் அற்ற பவுத்த இனவெறியன் கோழை ராஜபக்சே இந்தியா என்கிற வல்லரசு வெறியனிடமும், ஆசியகண்டத்தின் ரவுடிப்பயல் சீனாவிடமும், குள்ளநரி பாகிஸ்தானிடமும் படைகளை பெற்று தமிழர் சுதந்திர தாகத்தை அழித்தான்.

வரலாறு எங்கும் போராளிகளின் வீரம் வைரவரிகளால் வரையப்பட்ட அதேநேரம் எட்டப்பனாக இந்தியாவையும், கோழையாக சிங்கள இனவாதத்தையும் வரலாறு பதியத்தவரவில்லை. உலகிலேயே வான், கடல், தரை என்று முப்படைகளும் வைத்திருந்து இந்தியா வல்லரசின் ராணுவத்தை புறமுதுகு காட்ட செய்தவர்களும் நம் தமிழர்களே.

ஈழ இனப்படுகொலைக்கு காங்கிரஸ் காரணம் என்று ஓட்டுக்காக கோஷமிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஈழத்திலே இனப்படுகொலைகள் நடக்கும் போது மவுனம் சாதித்தே வந்தனர். ஒரு சாதாரண நிலக்கரி ஊழலுக்கு பாராளு மன்றத்தையே இஸ்தம்பிக்க செய்யும் இவர்கள் ஈழப்படுகொலைகள் நடக்கும் போது என்ன செய்தனர்?

ஊட்டியில் பயிற்சி பெறவந்த இலங்கை ராணுவவீரர்களுக்கு பயிற்சி கொடுக்க கூடாது என்று தமிழக பாரதிய ஜனதா கோஷம் போட்டது. நிலைமை இப்படி இருக்க சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேயை புத்தர் திருவிழாவுக்கு அழைத்தே தீருவது என்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடைபோடுகிறார். இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சி ஈழ விடுதலையை ஆதரித்தது.  ஆனால் கோமாளி ராஜீவ் காந்தியின் ஆட்சியில்தான் இந்த நிலையில் மாறுதல் உண்டாகியது.

ராஜீவை வைத்து சோனியாவின் விசயத்திலும் மாறுதல் உண்டாகியது. இது எல்லாம் ராஜீவ் கொலைக்கு பின்னால் நடந்த விடயங்கள்தான். ஆனால் ஆரம்பம் முதல் பார்பன ஊடகங்களும், பார்பன அரசியல் தலைவர்கள் மிகுந்த பாரதிய ஜனதா போன்ற கட்சிகளும் தமிழர்களுக்கும் தமிழர் போராட்டங்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வந்தன என்பதே இங்கே உண்மை. இதனால் இந்தியாவின் உதவியை ஈழமக்கள் நம்பி இருப்பது வீணளுக்கு இறைத்த நீர் போலத்தான்.

இலங்கைக்கு தலைவலியாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா ஈழப்போராட்டத்தை ஆதரித்தது. பின்னர் சீனா இலங்கைக்கு உதவ போகிறது நாங்களும் உதவுவதுதான் ராஜதந்திரம் என்று சொல்லி கொண்டது. உண்மையில் இந்தியாவுக்கு தமிழீழம் அமைவதில் உடன்பாடு கிடையாது. இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி நாடு ஒன்று கிடைத்தால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தனி நாடு கேட்க்கும் அபாயம் உண்டு என்று இந்தியாவுக்கு தெரியும்.

எனவே துரோகிகளான வடஇந்திய வடவர்களை நம்புவதை விட்டு விட்டு மேற்குலகம் சார்ந்த அரசியல் ராஜதந்திர நடவடிகைகளையும், மீண்டும் ஆயுத  போராட்டத்தை கட்டி அமைப்பதின் வழிமுறைகளையும் பற்றியே தமிழர்கள் யோசிக்க வேண்டும். இந்திய தமிழர்களோடு ஒருங்கிணைந்து வீரியமான ஒரு கூட்டு போராட்ட களத்தை உருவாக்க வேண்டும். இந்திய தமிழர்கள் என்பது தமிழ் அரசியல்வாதிகளை அல்ல. இந்திய தமிழ் மக்களோடு சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கை அவசியப்படுகிறது.
தமிழ் ஈழப்போராட்டம் என்பது கானல் நீரல்ல. ஒற்றுமையோடு செயல்பட்டால் அது நடக்க கூடியதே.
ரௌத்திரம் பழகு
...யாழினி...

No comments: