Saturday, January 19, 2013

இந்தியா உலகின் 3 வல்லரசாகுது!

Jan 19: சாமியோ நல்ல காலம் பொறக்க போது!இந்தியா 2050ல் உலகின் 3 வது  பெரிய வல்லரசாக போகுது! நம்புங்கள் சாமியோ!... டும்.. டும்... டும்.

லண்டனை தலைமையகமாகக் கொண்ட PWC என்ற நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கை ஒன்றில் 2050ம் ஆண்டில் உலகின் பொருளாதார மையமாக, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா விளங்கும். இரண்டாவதாக  அமெரிக்காவும், மூன்றாவதாக இந்தியாவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிந்திக்கவும்: முன்பு உலக அழகி போட்டிகளில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கும். சமீப காலமாக உலக அழகிகள் பட்டம் இந்தியாவுக்கு கிடைகிறது. இந்தியாவின் மிக பெரிய சந்தையை பிடிக்க கார்பரேட் கொள்ளைகாரர்கள் போடும் பிட்ச்சை தான் இதுவெல்லாம்.

அதுபோல்தான் இப்பொழுதும் 2050 ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசாகும் என்கிற பித்தலாட்டமும். இப்படி சொன்னால்தானே வால்மார்ட் போன்ற கார்பரேட் கொள்ளையர்கள் இலகுவாக நுழைய முடியும். இந்த வெத்து அறிக்கையை தூக்கி பிடித்துதானே பொருளாதார புளி ( லி போட்டால் புலிக்கு அவமானம்) மண்ணு மோகன் சிங் அணு உலைகளாக கட்டி தள்ள முடியும்.

தடையில்லாத மின்சாரத்தை மானியத்தில் கொடுத்தால்தானே வெளிநாட்டு கம்பனிகள் எல்லாம் இந்தியாவுக்கு வரும். இந்த கம்பனிகள் இந்தியாவுக்கு வந்து, அவர்கள் இங்கே பொருட்களை தயாரித்து இந்தியாவை முன்னேற்ற போகிறார்கள். 2050க்குள் இந்தியாவின் சுற்றுப்புற சுகாதாரத்தை நாசமாக்கி, விவசாயம் மற்றும் இயற்க்கை வளங்களை அழித்து இந்தியாவை குப்பை கூடையாக மாற்றி விட்டு போய் விடுவார்கள்.

உலகின் நம்பர் 1 குப்பை கூடையாக சீனாவும், இரண்டாவதாக இந்தியாவும்  மாறப்போகிறது. அமெரிக்கா உண்மையான வல்லரசாக விளங்கும் சீனாவும், இந்தியாவும் உலகத்திற்கே சிறந்த குப்பை கூடைகளாக மாறி போகும். அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவும் கேடு விளைவிக்கும் அனைத்து தயாரிப்புகளையும் சீனா, இந்தியா போன்ற குப்பை கூடை நாடுகளிடம் கொடுத்து விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்வார்கள். தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வார்கள். எனவே அவர்கள்தானே உண்மையான வல்லரசு.

நான் இந்த மண்ணு மோகன் ஐயா! மா.திரி பொருளாதாரமும் படிக்கல, நம்ம அணு குண்டு ஐயா! அபுல்கலாம் மாதிரி விஞ்சானமும் படிக்கல இருந்தாலும் இந்த மர மண்டைக்கு இப்படித்தான் நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

*மலர் விழி*

3 comments:

vazhkaipriya said...

whether India becomes in 2050 a big vallarasu or not what we need today is a NALLARASU. This is possible only by Indians.Why not we Indians put in efforts to establish a good government of,for,by the people.My blog address vazhkaipriya@blogspot.com

vazhkaipriya said...

whether India becomes in 2050 a big vallarasu or not what we need today is a NALLARASU. This is possible only by Indians.Why not we Indians put in efforts to establish a good government of,for,by the people.My blog address vazhkaipriya@blogspot.com

vazhkaipriya said...
This comment has been removed by the author.