பில்லா 2 திரைவிமர்சனம்
முந்தைய படம் தோல்வியோ , வெற்றியோ எப்படியிருந்தாலும் அடுத்த படத்திற்கான ஒப்பனிங்கை அப்படியே தக்கவைத்துக் கொள்பவர் அஜித், , அப்படியிருக்க 2011 ன் ப்ளாக்பஸ்டர் மங்காத்தாவை தொடர்ந்து வந்திருக்கும் படம் , ஐந்து வருடங்களுக்கு முன்னாள் மெகா ஹிட்டடித்த பில்லா படத்தின் பார்ட் 2 , இந்தியாவின் முதல் ப்ரீக்யூவல் படம் இப்படி சில சிறப்பம்சங்களையும் தாண்டி இந்த வருடத்திற்கே ஒரு மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிலீசாகியிருக்கிறது பில்லா 2
ஒரு சாதாரண அகதியாக இருந்து கடத்தல் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் டானாக டேவிட் பில்லா உருமாறுவதே கதை ... கொலை சதியில் இருந்து பில்லா ( அஜித் ) தப்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் படம் பிளாஸ்பேக்கில் விரிகிறது ... அகதிகள் முகாமில் நண்பனுக்காக இன்ஸ்பெக்டரை அடிக்கும் பில்லா கொஞ்சம் பிரபலமடைகிறான் ... முதலில் வைர கடத்தலின் ஆரம்பித்து , பிறகு ஹெராயின் கடத்தல் மூலம் அப்பாசியுடன் ( பாண்டே ) அறிமுகமாகும் பில்லா பிறகு அவன் சம்மதமில்லாமலேயே டிமொட்டி ( வித்யுத் ) யுடன் ஆயுதக் கடத்தலில் இறங்குகிறான் ... அப்பாசியை கொன்று விட்டு டிமொட்டியையும் பகைத்துக்கொண்டதால் எதிரிகள் மூலம் முதல்வரைக் கொன்ற பலி பில்லாவின் மேல் விழுகிறது ... பலியிலிருந்து மீண்டு டிமொட்டியையும் கொன்று விட்டு கடத்தல் உலகின் முடி சூடா மன்னனாக பில்லா மாறுவதுடன் படம் முடிகிறது ...
அஜித்திற்கு இது அல்டிமேட் ரோல் ... படத்தில் ஆதி முதல் அந்தம் வரை பிரேம் பை பிரேம் தல தாண்டவம் ஆடியிருக்கிறார் ... " எதிரியின் பயம் நம் பலம் " , " எனக்கு நண்பனாக இருக்கறதுக்கு தகுதி தேவையில்லை , ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தேவை " போன்ற சார்ப்பான வசங்களை அஜித் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது ... என்ன தான் மாஸ் ஹீரோ படமென்றாலும் படம் முழுவதும் அஜித் சகட்டுமேனிக்கு கையில் கிடைத்ததையெல்லாம் ( குண்டூசி உட்பட ) வைத்துக்கொண்டு எதிரிகளை ரத்த வெள்ளத்தில் வீழ்த்திக் கொண்டே போவது ஒரு லெவலுக்கு மேல் போரடிக்கிறது ... ப்ளாஷ்பேக் காட்சிகளுக்காகவாவது அஜித் கொஞ்சம் இளைத்திருக்கலாம்...
இந்த படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என்னும் போது இரண்டு ஹீரோயின்கள் தேவையா என்று தெரியவில்லை ... கடத்தல் கும்பலில் சமீராவாக நடித்திருக்கும் ப்ருணா அப்துல்லா டூ பீஸில் வளைய வந்தாலும் ஏனோ எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அஜித்தின் அக்கா பெண் ஜாஸ்மினாக நடித்திருக்கும் பார்வதி ஓமனக்குட்டன் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் பரிதாபமாக செத்துப்போகிறார் ... பில்லா வில் நமீதா , நயன்தாராவை எல்லாம் பார்த்த கண்களுக்கு திருஷ்டி கழித்துவிட்டார்கள் ...
வடநாட்டு இறக்குமதியாமான இரண்டு வில்லன்களும் வாட்டசாட்டமாக இருந்தும் , அஜித்திடம் அடி வாங்கி மரித்துப் போகிறார்கள் ... டிமொட்டியாக நடித்திருக்கும் வித்யுத்தின் அறிமுக காட்சி அற்புதம் ... அஜித்தின் நண்பனாக வருபவர் , கடத்தல்காரர் இளவரசு , அஜித்தின் மேல் காண்டோடு அலையும் சுந்தர்.கே.விஜயன் எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள் ...
படத்தின் பாடல்களை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் யுவனின் பின்னணி இசை பிரமாதம் ... " மதுரை பொண்ணு " பாடல் முணுக்க வைக்கிறது ... நா.முத்துக்குமார் வரிகளில் " உனக்குள்ளே மிருகம் " பாடல் வரிகளும் , அதை படமாக்கிய விதமும் அருமை ... சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன ... வன்முறைக்காக படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் பெண்கள் , சிறுவர்கள் கூட்டம் நிறையவே இருக்கிறது ...படம் டெக்னிக்கலி செம சௌண்டாக இருக்கிறது ... ஒளிப்பதிவாளர் ராஜசேகரும் , எடிட்டர் சுரேஷ் அர்சும் அதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் ...
பில்லாவை போலவே பில்லா 2 வும் மேக்கிங்கில் படு ஸ்டைலாக இருக்கிறது ... அதற்காக இயக்குன்ர் சக்ரிக்கு ஒரு சபாஷ் போடலாம் .... ஜாபருடன் சேர்ந்து இவர் எழுதியுள்ள வசனங்களும் சார்ப் அண்ட் ஸ்வீட் ... ஒவ்வொரு காலகட்டத்திலும் பில்லாவின் முன்னேற்றத்தை சரியாக பதிவு செய்திருக்கிறார்கள் ... சட் சட்டென்று பில்லா எடுக்கும் முடிவுகள் மூலமும் திரைக்கதையில் வேகத்தை கூட்டியிருக்கிறார்கள் ...
ஹீரோயின்களை போலவே மற்ற குறைகளும் படத்தில் உள்ளன ... முதல் பாதியில் நாயகனின் பாதிப்பு நிறையவே இருக்கிறது ... இரண்டு மணி நேரத்திற்குள் பில்லாவின் வாழ்க்கையை காட்டி விட வேண்டுமென்ற முனைப்பால் திரைக்கதையில் வேகத்தை விட அவசரமே அதிகம் தெரிகிறது ... முதல்வர் கொலையில் நடக்கும் சதி , ஓமனக்குட்டனை அஜித் காப்பாற்றும் காட்சி போன்ற ஒன்றிரண்டை தவிர மற்றவையெல்லாம் பெரிய ட்விஸ்ட் ஏதுமில்லாமல் ப்ளாட்டாக இருக்கிறது ... அஜித் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடிக்கும் , மற்றவர்களுக்கு பில்லா , மங்காத்தாவுக்கு ஒரு மாற்று குறைவென்றாலும் பில்லா 2 டல்லடிக்காத டானாக வே இருப்பான் ... நிச்சயம் ரசிகர்களுக்கு பில்லா 2 - டான் பார் பேன் ( DON FOR FAN )

ஸ்கோர் கார்ட் : 43
8 comments:
நடுநிலையான விமர்சனம்...
பகிர்வுக்கு நன்றி...
sirappana vimarsanam parattukal
சிறப்பான நடை.வாழ்த்துக்கள்!
நண்பா... இப்படி எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்களே....
படம் பார்க்க ஆசை வருமோ....
திண்டுக்கல் தனபாலன் said...
நடுநிலையான விமர்சனம்...
பகிர்வுக்கு நன்றி...
நன்றி...
மாலதி said...
sirappana vimarsanam parattukal
Thanks
Athisaya said...
சிறப்பான நடை.வாழ்த்துக்கள்!
நன்றி...
AROUNA SELVAME said...

Post a Comment