நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நொடியாய்ப் பிறந்து மணித் துளியாய் மறைந்து புது ஆண்டாய் மலர்ந்த பொழுதே.... வறண்ட வாழ்வும் தளர்ந்த கையும் உன் வரவால் நிமிர்ந்து எழுதே! புது வருடம் பிறந்தால் வாழ்வு மாறும்-என ஏங்கித் தவிக்கும் நெஞ்சம்.. உன் வரவே நெஞ்சின் தஞ்சம்! இறந்த காலக் கவலை அதனை மறந்து வாழ பிறந்து வா வா என் புதிய வாழ்வே விரைந்து வா வா! அழுதுவிட்டேன் ஆண்டு முழுதும் முயன்று பார்த்தேன் விழுந்து விட்டேன் அழுத நாளும் சேர்த்து மகிழ்ந்து வாழ எழுந்து நின்று இமயம் வெல்ல இனிய ஆண்டே இன்றே வா வா நன்றே வா வா!
1 comment:
நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த
பொழுதே....
வறண்ட வாழ்வும்
தளர்ந்த கையும்
உன் வரவால்
நிமிர்ந்து எழுதே!
புது வருடம் பிறந்தால்
வாழ்வு மாறும்-என
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம்..
உன் வரவே
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக்
கவலை அதனை
மறந்து வாழ
பிறந்து வா வா
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!
அழுதுவிட்டேன்
ஆண்டு முழுதும்
முயன்று பார்த்தேன்
விழுந்து விட்டேன்
அழுத நாளும் சேர்த்து
மகிழ்ந்து வாழ
எழுந்து நின்று
இமயம் வெல்ல
இனிய ஆண்டே
இன்றே வா வா
நன்றே வா வா!
அன்புடன் இனியவன்
Post a Comment