
கண்கண்ட தெய்வங்களான பகலில் ஒளிரும் சூரியனும், இரவில் குளுமைமையான சந்திரனும் உலகத்திற்கு ஒளி வழங்குகின்றர்..விருதுநகர் மாவட்டம், சாத்தூர் விஸ்வநாதர் கோயிலில் தினமும் காலை,மாலையில் பூஜை நடக்கிறது.
மூன்று தரிசனம்: மார்கழி திருவாதிரை விழாவின்போது விஸ்வநாதர் சன்னதி நேரே நடராஜரையும், அவருக்கு எதிரே ஒரு கண்ணாடியையும் வைத்து விடுவர். அன்று காலையில் சிவன், நடராஜர் மற்றும் அவர் முன்புள்ள கண்ணாடி பிம்பத்திற்கு ஒரே சமயத்தில் தீபாராதனை நடக்கும். சிவன் ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவமில்லாதது), அருவுருவம் (முழுமையான வடிவம் இல்லாத நிலை) என மூன்று நிலைகளில் அருள்பாலிப்பதை உணர்த்தும் விதமாக இந்த பூஜை நடக்கும். கோயில் முகப்பில் அஷ்டலட்சுமிகளுக்கும் சுதை சிற்பம் உள்ளது. ருத்ராட்ச மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.

உலகை சமப்படுத்த தென்திசைக்கு வந்ததன் அடிப்படையில், இங்கு தெற்கு நோக்கிய அகத்தியர் சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு.
4 comments:
நீங்கள் இன்னொரு blog உம் வைத்திருந்ததாக ஞாபகம். ஆனால், இந்த blog மட்டும்தான் உங்கள் profile இல் போடப்பட்டுள்ளது.
வணக்கம்..
முன் கூட்டிய பொங்கல் வாழ்த்துக்கள்.அருமையாய் ரத்தினச் சுருக்கமாய் எழுதி இருக்கீங்க....
"மூன்று நிலைகளில் அருள்பாலிப்பதை உணர்த்தும் விதமாக இந்த பூஜை நடக்கும்"
பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள உதவுகிறது இப்பகுதி
வணக்கம்,
தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Post a Comment