Wednesday, March 7, 2012

சிவம் -- 2

திருக்  கோயில்களில் சந்திர சேகரர், 
கல்யாண சுந்தரர் என மானிட உருவத் தோற்றங்களில் 
தோற்றம் அளிப்பது வியக்த மூர்த்தியாகும்.


அங்கங்கள் எதுவும் இல்லாமல்,
லிங்க வடிவில் காணப்படுவது அவ்வியக்த மூர்த்தியாகும்.


சிவ லிங்கத்தில் உருண்டை வடிவமாக 
இருக்கும் பாகம் " ருத்ர பாகம்".
நாதமயமான லிங்கத்தின் 
பொருந்தும் பாகத்தில் எட்டு மூலமாகக் 
கொண்டு பொருந்தும் பாகம் "திருமால் பாகம்".
பீடத்தின் கீழ்ப்புரத்தின் நான்கு மூலைகளும்
"பிரம்ம  பாகம்".
உருண்டை வடிவிலான லிங்க பாகம் "ஆணாகவும்"
திருமால் பாகம் "பெண்ணாகவும்"
பிரம்ம பாகம் "ஆணும் அன்று, பெண்ணும் அன்று "
என்று  சொல்லப்படும்.
மானிடனாக மட்டுமல்ல,
படைக்கும் ஒவ்வொரு உயிரனமும்,
ஆணாகவோ, பெண்ணாகவோ, ஆணும் அன்று
பெண்ணும் அன்று என்றே இருக்கும் 
என்பதனை உணர்த்தவும்,
ஆண் உஷ்ணம் (கோபம்) கொண்டவனாகவும்,
தலைமைத்துவம் கொண்டவனாகவும் 
இருப்பான் என்பதனையும்,
பெண்ணானவள் சார்ந்தவளாகவும்,
எதனையும் தாங்கிக் கொள்பவள் ஆகவும், 
நெகிழ்ந்து கொடுப்பவளாகவும் இருப்பவள் 
என்பதனையும், அன்பு பாராட்டுபவள் ஆகவும் 
இருப்பதனை உணர்த்துகின்றது.
தனித் தன்மை இல்லாதவர்கள் ஆகவும்
நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள் ஆகவும்
திருவாகவும் நங்கையாகவும் 
விவேகமாகவும் தனித்திருப்பவர்கள் ஆகவும் 
தன்னை உணர்ந்து வாழ்வியலை 
தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும்
வல்லமை உடையவர்கள் ஆகவும்
இருப்பதனை உணர்த்துகின்றது. 


ஒன்றை ஒன்று சார்ந்தே ஒன்று இருக்கும் 
என்பதனை உணர்த்துகின்றது.
ருத்ர பாகம் சூரியனாகவும்,
திருமால் பாகம் சந்திரனாகவும்
பிரம்ம பாகம் நீரும் நிலமும் இணைந்த 
உலக பாகமாகவும் உணர்த்துகின்றது.


இந்த லிங்கத்தின் இடைப்பகுதியில் சதாசிவம்,
மேற்குப் புறத்தில் ஈசன் எனப்படும் சங்கரனும்,
கிழக்குப் புறத்தில் ஈசாணனும்,
வடக்குப்புறத்தில் பிரம்மனும்,
தெற்குப் புறத்தில் திருமாலாகவும் 
ஆகிய ஐந்து மூர்த்திகள் இருப்பதாகவும் 
உணர்த்தப்படுவது , ஐவகைத் தொழில்கள்
மானிடனாகப் பிறப்பவன் மேற்கொள்ளப்படுவதனையும் 
உணர்த்து கின்றது.
பஞ்ச பூதங்கள் எனப்படும்,
நிலம், நீர், காற்று, ஆகாயம் (விண் ), நெருப்பு 
இவற்றினைச் சார்ந்தே வாழ்பவனாகவும்,
இருப்பதனையும் உணர்த்துகின்றது.


வாழ்வியலின் தத்துவத்தினை உணர்த்திடவே
மெய்ஞானிகள் எல்லாம் வல்ல 
இறைவனை இலிங்க வடிவில் அமைத்து 
வழிபட்டனர்.
அருவ உருவத் திருமேனியே இலிங்கத் திருமேனி.




தொடரும்.....








1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிவலிங்கம் உணர்த்தும் தத்துவங்களை அருமையாக விளக்கி உள்ளீர்கள்.நல்ல ஆன்மீக பதிவு. நன்றி.