Tuesday, March 6, 2012

வாழ்க்கை

பிறந்தது முதல் இறப்பு வரை 
வாழ்க்கைப் பருவத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.


பிறந்த குழந்தை முதல் திருமணம் 
நடைபெறாத இளமைப் பருவத்தினை 
பிரம்மச்சரியப் பருவம் என்பர்.


குழந்தையாய் இருக்கும் போது 
பொருளின் மீதும், ஒவ்வொன்றையும் 
கற்றுக்கொள்ளவும் ஆசைப் படும் பருவம்.


வளரும் காலத்தில், எதனையும் 
சிரத்தையாக கற்றுக் கொள்ளவும்,
பொன்னையும், பொருளையும் பெறுவதற்கான 
உழைப்பின் வல்லமையை புரிந்து கொள்ள
வைத்து, எதனையும் சாதிக்கும் ஆற்றல்
ஆசையை அடைந்து தீரவேண்டும் 
அதற்க்கான வழிமுறைகளை 
ஆராய்ந்து நல்ல வழியோ, தீய வழியோ 
அதை அடைய முயலும் பருவம்.


திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு,
மோகம் கொண்டு, அளவற்ற போகம் கொள்ள 
துடிக்கும் வயது. 

வயது, உருவம், நிறம் 
பற்றிய சிந்தனை ஒரு ஓரத்தில் 
வைத்துக்கொண்டு எதனையும் 
அடைந்தே தீர அதற்க்கான முயற்ச்சிகளை 
மேற்கொள்வதும், வீடு, நிலம்,
என மண்ணின் மீது ஆசை,
தன்னிடம் கொஞ்சி மகிழும் 
மனைவி, மகள், தாயிற்க்காக
 பொன் பொருட்களை 
வாங்கிக் குவிக்க ஆசை. 


இந்தக் குழந்தைப் பருவத்திலும்,
இளமைப் பருவத்திலும், உடலை வளர்ப்பதிலும்
அதனை ஒழுங்கு முறையாக வைத்துக் கொள்வதிலும்
அளவற்ற ஈடுபாடு கொள்வர்.


மூன்றாவது கட்டமான முதுமைப் பருவத்தில்,
தான் வாழ்ந்த காலத்தில் 
உறவுமுரைகளிடம் கொண்ட அன்பு,
கோபம், மோகம். சிற்றின்பம்,
பகை, கடன், விரோதம் 
சொத்து சேர்த்தல், தன் தவறால் 
இழந்த நிலை இவற்றை எல்லாம் 
நினைத்தும், கடந்தகால சம்பவங்களை 
அடுத்தவரிடம் தனது அனுபவமாக
பிறரிடம் கூறி காலம் கழிக்கும் நிலை.


இந்த மூன்று பருவத்திலும்,
தனது தேவைகளுக்காக, தனக்கு 
கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்,
தனக்கு நோய் வரக்கூடாது,
வந்த கஷ்டம் தீர வேண்டும்,
கஷ்டம் இனி வரக்கூடாது,
குடும்பம் நன்றாக செழித்து ஒங்க வேண்டும்
எந்த தவறு செய்தாலும், தண்டனை வராமல்
தப்பித்துக் கொள்ள வேண்டும்,
யாரை இம்சித்தாலும்,
எந்த உயிரினத்தை வதைத்தாலும்
பழியோ, பாவமோ சேரக்கூடாது 
என்பதற்காகத் தான் ஆலயம் சென்று
இறைவனை வணங்கச் செல்கின்றான்.


ஆனால் , தன்னை ஒரு போதும் 
உணர்வதற்கு முற்படுவதே இல்லை.
தனது, நல் வினைகளும், தீவினைகளும் 
நம் நிழல் போல நம்மைத் தொடரும் என்பதனை 
அவன் உணருவதே இல்லை.


இறைவன் கொடுப்பதும் இல்லை.
எடுப்பதும் இல்லை.
நமது நல்வினையின் காரணமாக 
நமக்கு கிடைப்பதனை இறைவன் கொடுக்கின்றான் 
என்கின்றோம்.
நாம் செய்த தீவினையின் காரணமாகவே 
துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையானது 
என்பதனை மறந்து விடுகின்றோம்.


உடலும், உள்ளமும் ஒரு நிலையில் வைப்பதே இல்லை.
மாறாத மனமும், மாறாத குணமும் கொண்டு
நம் மீது சேற்றை நாமே பூசிக்கொண்டு
பரிகாரம் தேடி அலைவது எவ்வகையில் நீதி?


உழைப்பு வீணாவதும், வெகுமதியாவதும்
இறைவன் கையிலா? நம் கையிலா?


தவறுகளும், தப்புகளும் செய்வது 
இறைவனா?/  நாம் தானா ?


நோய்வாய்ப்பட்ட மனதிற்கும்,
உடலிற்கும் காரணம் 
இறைவனா? நாம் தானா ?


கோபம் கொள்வதும், பகைமை கொள்வதும்
பிடித்தால் அன்பு பாராட்டுவதும் 
நாம் தானே?


வாழ்க்கையினை ஒரு உணர்வு பூர்வமாக,
உணர்ந்து, அறிவு பூர்வமாக சிந்தனை செய்து
உள்ளத்தில் உள்ள இறைவன் 
ஒவ்வொரு செயலையும்  கண்காணித்துக் 
கொண்டிருப்பதனை உணர்ந்து,
மனமே சாட்சியாகவும்,
நம்மைத் தாங்கிக் கொண்டிருக்கும்
பூமாதாவிர்க்கும், தன் ஒளியால்   உலகைக் 
காக்கும் சூரிய சந்திரன் சாட்சியாக 
இருப்பதனை உணர்ந்து 
உண்மையாக ஒழுக்கமாக நேர்மையாக 
வாழ்ந்து காட்டுவோம்.


அனைத்தும் அந்த இறைவனுக்கே சமர்ப்பணம் 
செய்து, மன நிம்மதியுடன் வாழ்வோம்.!
  


2 comments:

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி. நான் இப்பவும் முதலாவது கட்டத்துக்கை தான் நிக்கிறன் போல

கோமதி அரசு said...

வாழ்க்கையை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

அனைத்தும் அந்த இறைவனுக்கே சமர்ப்பணம்
செய்து, மன நிம்மதியுடன் வாழ்வோம்.!//

இது தான் வாழ்க்கையை நம்பிக்கையுடன் நடத்தி செல்லும் வழி.