Tuesday, March 6, 2012

சிவம் --1

மெய், வாய், கண், மூக்கு, செவி
 என்ற ஐம்புலன்கள் அற்றது;
மனதுக்கும், சொல்லுக்கும்
 எட்டாத நிலையில் இருப்பது;
அளவில்லாத பேரொளி கொண்டது;
தனக்கு மேல் எப்பொருளும் 
இல்லாமல் தான் ஒன்றே மேலாகி இருப்பது;
உருவமற்றது;
தூய்மையானது;
சுட்டிக்காட்ட எத்தன்மையும் இல்லாதது;
அளவில்லாத குணங்கள் கொண்டது;
எந்த நிறமும் இல்லாதது;
அழிவே இல்லாதது;
எல்லா உலகங்களும் தோன்றக் காரணமாயிருப்பது;
இது தான் என்று சொல்லி
 உணர்த்தும் அளவிற்கு தெளிவு இல்லாதது;
இதுவே பர சிவம் ஆகும்.
ஆம்....இதுவே ஆதி சிவன் 
என்றழைக்கப்படும் சிவம் ஆகும்.

மக்கள் தியானம் செய்யவும், 
மனதினில் பாவனையாகக் கொள்ளவும்,
 உருவம் கொண்டு 
உருவமின்றி 
மெய்ஞானத் தேடல் கொள்ளச் செய்கின்றது. 

சிவம் - சக்தி பாவமாகவும், 
ருத்ர பாவமாகவும்,
திருமால் பாவமாகவும்,
பிரம பாவகமாகவும் 
கொள்ள வேண்டியே மெய்ஞானிகள் 
லிங்க வடிவில் பூஜித்தனர்.

1 comment:

கோமதி அரசு said...

மக்கள் தியானம் செய்யவும்,
மனதினில் பாவனையாகக் கொள்ளவும்,
உருவம் கொண்டு
உருவமின்றி
மெய்ஞானத் தேடல் கொள்ளச் செய்கின்றது.//

நல்ல விளக்கம்.