Thursday, April 5, 2012

உத்திர வழிபாடு


 உத்திர வழிபாடு
உத்திரம் நட்ச்சத்திரத்தின் நெகடிவ் பாயிண்ட்டும் அதற்க்கான ஆலயமும்:
தீராத வேதனை,தைரியமின்மை, சிக்கல்களில் மாட்டிக் கொள்ளுதல், இனம் புரியாத அச்சம்.
இதற்க்கு தீர்வு அளிக்கும் ஆலயமே சிக்கல் சிங்காரவேலர் ஆலயம்.

உத்திர நட்ச்சத்திர நாளில், முருகனை நினைத்து விரதம் மேற்கொள்வது நல்லது. அன்று காலை குளித்து அதன் பின்பாக, கண நாதனை தொழுது, வலது கையில் மங்கள மஞ்சள் நிற துணியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து முடிந்து, கங்கனமாக கட்டி, தங்களது குடும்ப சிக்கல் தீர இறைவன் வழி காட்ட வேண்டுதல் செய்து கொள்ள வேண்டும். உத்திர நாளன்று குடும்ப வழக்கப்படி , பூஜை முடியுங்கள்.
ஆறு நாட்கள், விரதம் எடுத்து ஏழாம் நாள், சிக்கல் சென்று சிங்கார வேலரை தரிசிக்க செல்ல வேண்டு,.
பூஜைப் பொருட்கள்: தேங்காய் -1 , வாழைப் பழம் - 6 , வரகு அரிசி மாவுடன் நாட்டு சர்க்கரை கலந்த கலவை, தேன், விபூதி, நெய் விளக்கு : 6 + 1 +2 = 9. விநாயகருக்கு இரு நெய் விளக்கு ஒரு விளக்கு கொண்டு ஏற்றி, இரு விளக்கை ஏற்றி வைத்து, 3 ஊது வத்தி ஏற்றி, வழிபட வேண்டும்.
அதன் பிறகு, முருகப் பெருமாநிர்க்கு அர்ச்சனை. நம் பிரச்சினையை முருகப் பெருமானிடம் ஒப்படைத்து விட்டதால், சுவாமி பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை முடித்த பின், மயில் வாகனம் முன்பாக அறுகோண வடிவில் நெய் விளக்கு வைத்து, விநாயகர் சந்நிதானத்தில் விளக்கு ஏற்ற பயன்படுத்திய விளக்கு கொண்டு ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றிய பிறகு, ஆலயம் 6 சுற்றுகள் சுற்றி வந்து, கொடி மரமஅருகே விழுந்து வணங்க வேண்டும்.
அதன் பின்பாக, அர்ச்சனை செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஆலயம் விட்டு வெளியில் வந்து வயதான பெரியவர்களுக்கு தேங்காயும், வாழைப் பழத்தையும், சிறுவர்களுக்கு வரகரிசி மாவினையும் வழங்க வேண்டும். பிட்ச்சைக் காரர்களுக்கு அர்ச்சனைப் பொருட்களைத் தரக் கூடாது. வேண்டுமென்றால் தயிர் சாதம் அவர்களுக்கு வழங்கலாம். காசோ, பணமோ தரக்கூடாது. அதே போல், அர்ச்சகருக்கு தட்சிணை தொகையினை, தட்டில் மட்டுமே வைக்க வேண்டும். கையில் தருவது மரியாதை அல்ல. செய்யவும் கூடாது. கற்பூரம் ஏற்றுவதாக இருந்தால், பிளாஸ்டிக் கவர் நீக்கி, ஏற்றவேண்டும். ஒருவர் ஏற்றிய எரியும் கற்பூரத்தில் வைக்கக் கூடாது. தனியாக வைத்துத் தான் ஏற்றவேண்டும்.
தானம் அளித்த பிறகு, ஆலயத்தினுள் வந்து, கையில் கட்டிய கண்கனத்தினை அவிழ்த்து உண்டியலில் செலுத்தவும். இருபது நிமிட நேரம் அமர்ந்து, இறைவனுக்குகந்த பாடல்களை படிக்கவும். இருப்பத்தொன்றாவது நிமிடம் பிட்ச்சை இடாமல் ஆலயம் விட்டு வெளியே வந்து வீட்டிற்கு வரவும். ஆலயத்தினுள் தேவையின்றி பேசுதலை தவிர்க்கவும்.
வீடு வந்து, முருகர் முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி, அவ்விளக்கு அணையும் வரை பூசை அறையில் அமர்ந்து பக்தி பாடல் படிக்கவும். அதன் பிறகே வெளி வேலைக்கு செல்லலாம். இவ்வாறு செய்ய,
அதிசயப் படத் தக்க வகையில், சிங்கார வேலன், உங்களின் பிரச்சினைகளை களைவதனை நீங்களே அனுபவிக்கலாம். மனம் மகிழும்படி செய்வான் எம்பெருமான் சிக்கல் சிங்கார வேலன்.
 

இன்னொரு பரிகார வழிமுறையும் உண்டு: புனர் பூச நட்ச்சத்திர தினத்தன்று குளித்து இறைவனை வழிபட்டு வலது  கையில் மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து முடிந்து, வேண்டுதல் செய்து, ஆறு நாள் விரதம் இருந்து, உத்திர நட்ச்சத்திர திரு நாளில் பரிகாரம் முடிக்கலாம். சிக்கல் சிங்கார வேலரை தரிசிக்க செல்ல முடியாத நிலை இருந்தால் அருகில் உள்ள குன்றின் மீதுள்ள குமரனை தரிசித்து பேறு பெறுவீர்!2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான தகவல்கள்.. பாராட்டுக்கள்..

கணேஷ் said...

உத்திரம் பற்றிய பல விஷயஙகளை இன்று அறிந்து கொண்டேன். நன்றி! நல்வாழ்த்துக்கள்!