Thursday, September 20, 2012

இலங்கை ராணுவத்திற்கு மறைமுக பயிற்சி!

Sep 18: இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ராணுவப் பயிற்சியில் இந்திய வீரர்கள் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட 5 நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேரும் இலங்கையின் முப்படையைச் சேர்ந்த 2,000 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

சிந்திக்கவும்: அரசு பயங்கரவாதிகள் எல்லோரும் ஓரணியில் சேர்ந்திருக்கிறார்கள். எலியும் புனையும் ஆன இவர்களுக்குள் அப்படி என்ன விசயத்தில் ஒற்றுமை. பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள. ஆகா பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை செய்வது யார்? இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை இவர்கள் நான்கு பேரும் பெரிய பயங்கரவாதிகள் ஆச்சே!

 
இந்த அரசு பயங்கரவாதிகள் மக்கள் போராட்டங்களை, விடுதலை போர்களை ஒடுக்க பகைமை மறந்து அணி சேர்ந்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்! மக்கள் எழுச்சி உண்டாகி விட கூடாது. மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஒரு பயிற்சி. என்ன பயங்கரவாதம் செயல் இங்கே நடக்கிறது? எதை கட்டு படுத்த முடியாமல் இவர்கள் திணறுகிறார்கள்? ஏன் இந்த கொலைவெறி பயிற்சி!

ஒன்று மட்டும் நல்லா தெரியுது, இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற பயங்கரவாத அரசுகள் ஒன்றாய் சேர்ந்து இலங்கைக்கு மறைமுகமாக பயிற்சி கொடுக்கிறார்கள். இந்த பயிற்ச்சியில் இலங்கை மட்டும் இருந்தால் தங்கள் குட்டு அம்பலமாகி விடும் என்று மாலதீவு, வங்கதேசம் போன்ற நாடுகளை கூட்டுக்கு சேர்த்து கொண்டார்கள். இது முழுக்க முழுக்க இலங்கை ராணுவத்திற்கு கொடுக்கப்படும் பயிற்ச்சியே.


ரௌத்திரம் பழகு
...யாழினி...

1 comment:

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

தமிழ்வண்ண நற்றிரட்டைச் சற்றேநான் பார்த்தேன்!
உமியென நம்பகையை ஊதுகின்ற பக்கங்கள்!
ஈழ நிலமெங்கும் வீரவிதை! மீண்டும்நாம்
சூழ எழுவோம் சுடா்ந்து

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr