Friday, September 28, 2012

கார்பசேவ் போல் வாக்கெடுப்பு நடத்துவாரா? மன்மோகன் சிங்!

Sep 25: எக்காரணத்தைக் கொண்டும், எந்த நேரத்திலும், தமிழகத்துக்கு தண்ணீர் விடும் முடிவை, கர்நாடகா மேற்கொள்ளக் கூடாது' என, மாநில அரசை வற்புறுத்தி, பா.ஜ.க.வினர் பெங்களூரில் போராட்டம் நடத்தினர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி இதற்க்கு என்ன சொல்லப் போகிறது. ஒன்று தண்ணீர் விட வேண்டும் என்று போராட்டம் நடத்துவார்கள், இல்லை என்றால் நம்ம ஆள் சொல்லி விட்டானே என்று மவுனம் காப்பார்கள்.

காவேரி நதி நீர் பிரச்சனையில் இதுவரை வந்த தீர்ப்புகள் அனைத்தையும் கர்நாடகா அரசு காலில் போட்டு மிதித்தே வந்துள்ளது.  தமிழ் நாட்டில் இருந்து தயாராகும் மின்சாரத்தை மட்டும் மத்திய அரசு பிடுங்கி கர்நாடகா, கேரளா, ஆந்திரா எல்லோருக்கும் தாரைவார்த்து கொடுக்கிறது.

ஆனால் நமக்கு தேவையான தண்ணீரை மட்டும் அவர்களால் பெற்று கொடுக்க முடியவில்லை. இதற்க்கு எதற்கு நடுவண் அரசு என்று ஒன்று தேவையா? தமிழ் நாட்டில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பதிலாக நாம் பண்ட மாற்று என்கிற அடிப்படையில் தண்ணீரை பெற்று கொள்ள முடியும். கையாலாகாத மத்திய அரசால் நமக்கு என்ன பிரோஜனம்.

மீண்டும் பழைய காலங்களில் அரசர்கள் பண்ட  மாற்று முறையில் வளங்களை பகிர்ந்து கொண்டது போல் பகிர்ந்து நாம் சிறப்பாக வாழ முடியும். மன்னர் காலங்களில் இருந்த செழிப்பு கூட இப்போது இல்லை. இதற்க்கு ஏன் மத்திய அரசு என்ற ஒன்றின் கீழ் நாம் வாழவேண்டும்? இதற்க்கு எதற்கு ஒருதேசம்? மாநிலங்களுக்குள் சமநிலை பேணாத ஒரு அரசின் நிழலில் வாழ்வதால் நமக்கு என்ன நன்மை?

ரஷ்யாவில் கார்பசெவ் செய்தது போல் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி ரஷ்ய குடியரசை விட்டு பிரிந்து போக விருப்பம் கொண்டவர்கள் போக அனுமதி அளித்ததுபோல்,  இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு தெரியும் எத்தானை மாநிலங்கள் தனிநாடாக பிரிந்து போகிறது என்று. போலி சித்தாந்தங்கள் மூலம் மக்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கு பதிலாக இப்படி மக்களின் உண்மையான விருப்பத்தை அறிந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வாக்கெடுப்பு நடத்துவாரா?

3 comments:

சந்திர வம்சம் said...

சிங்கா வாக்கெடுப்பு நடத்துவார்!வாயே திறக்கமாட்டார்!
[எனது தளத்தில் வருகை புரிந்து கருத்திடமைக்கு நன்றி..பத்மாசூரி.]

Unknown said...

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க

Unknown said...

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க