இலிங்கோற்பவ மூர்த்தி
தனது நிலையினை உயர்த்திக் கொள்ள,
பொய்யும் புரட்டும் சொல்லி,
சந்தர்ப்ப சாட்சியங்களை பொய்யினால்
உருவாக்கிக் கொள்பவர்கள் அதல பாதாளத்தில்
வீழ்வார்கள் மற்றும் இருந்த இடம்
தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.
தனது செயல்கள், கீழ்த் தரமாகவும்,
குற்றங்களையும் குறைகளையும் நோண்டி நோண்டி
ஆராய்ந்து விமரிசிப்பவர்களும்
தனது தவறையும், குறைகளையும்
திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்போது
தனது குற்றங்களை ஒத்துக் கொண்டு,
பிராயச் சித்தம் தேடுபவர்கள்
பொய்சொல்லி வாழ்பவர்களை விட மேலானவர்கள்
என்பதனையும்,
உண்மை என்பது அப்பழுக்கற்ற
நெருப்புச் சுடரானது. ஜோதியானது.
உண்மையாய் சத்தியம் எனும் ஜோதியை
கைக் கொண்டவர்களது வாழ்வு
சோதிபோல் பிரகாசிக்கும்; என்றும் நிலைக்கும்;
என்பதனை லிங்கோற்பவ மூர்த்தியாக
காட்சி தருகின்றார்.
பொய்யான வாழ்வு வாழ்வு வாழ்பவர்களுக்கு
சூரிய திசையில் சூரிய புத்தி,
மற்ற திசை காலங்களில் சூரிய புத்தி
நிகழும் காலங்களில் உடலிற்கு வெப்பு
(உஷ்ணம் சம்பந்தப்பட்ட ) வியாதிகள் வரும்.
திருவண்ணாமலை - அடி அண்ணாமலையில்
உள்ள சிவாலயத்தில் உள்ள இறைவனுக்கு
ஞாயிறு தினத்தன்று நல்லெண்ணெய் அபிஷேகம்
செய்து, வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து,
10 நெய் தீபங்களை நந்தீசருக்கு முன்பாக ஏற்றி,அதன் பின்,
அம்மையை தரிசித்து
இட வலமாக மூன்று முறை வலம் வந்து,
கொடி மரத்தின் அருகே விழுந்து வணங்கி,
20 நிமிடம் அமர்ந்து 21 வது நிமிடம் ஆலயம்
விட்டு நீங்கி, வீடு வந்து முருகர் முன்பாக
ஒரு நெய் தீபம் ஏற்றி பூசையை நிறைவு செய்யவும்.
விளக்கு அணையும் வரை, வெளியில் செல்லாமல்
முருகர் முன்பாக அமர்ந்து கந்தர் சஷ்டி கவசம்
படிக்கவேண்டும் என்பதனை மறக்க கூடாது.
(படம் ; நன்றி தினமலர்)
4 comments:
நல்ல பகிர்வு
சிறந்த ஆன்மீக பதிவு.
//தனது நிலையினை உயர்த்திக் கொள்ள, பொய்யும் புரட்டும் சொல்லி,
சந்தர்ப்ப சாட்சியங்களை பொய்யினால்
உருவாக்கிக் கொள்பவர்கள் அதல பாதாளத்தில் வீழ்வார்கள் மற்றும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.//
ஆனாலும் பாருங்கள் நம்நாட்டு அரசியல்வாதிகள் சுகபோகமாக தானே இருக்கிறார்கள்!
ஆனாலும் பாருங்கள் நம்நாட்டு அரசியல்வாதிகள் சுகபோகமாக தானே இருக்கிறார்கள்!
காலங்கள் மாறும்...காட்சிகளும் மாறும். நோயின் மூலமாகக் கூட தண்டனை கிடைக்கும்...
கருத்திட்டமைக்கு நன்றித் தோழரே!
நன்றி சகோதரி!
கந்த சஷ்டி கவசம் சிறுவயதில் நன்றாகச் சொல்வேன் இப்போது கொஞ்சம் மறந்து போய்விட்டது. இந்தப் பதிவின்மூலம் மீண்டும் கந்த சஷ்டி கவசத்தை சொல்லிப் பார்த்தேன். நன்றி.
Post a Comment