Sunday, August 14, 2011

வாழ்க சுதந்திரம் ! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!


வாழ்க சுதந்திரம் ! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'
















சுதந்திரதினம் கொண்டாட்டத்திற்காக கோவையில் நடந்த கோயில் திருவிழாவில், அம்மனுக்கு தேசியக் கொடி நிறங்களிலாலான கனிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

தேசபக்த மதத்தாரின் தெய்வம்'பாரத மாதா'.


தமிழ் மொழியில் பாரதமாதா மீது பதிகம் பாடிய முதற் கவிஞர் பாரதியார்
பாரத சமுதாயம் வாழ்கவே!'என 'ஜெய பேரிகை கொட்டடா!' என்று முழங்கினார் நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலாவாய் உதித்த பாரதி.
விடுதலைப் போராட்ட காலத்தில் வந்தேமாதரம் என்னும் மந்திரச் சொல்லான மகா மந்திரத்திற்குத்தான் என்ன மதிப்பு.! 




'
ரத்தம் சிந்தி யுத்தம் செயது பெற்ற மண்
புத்த்னோடு புனித காந்தி பிறந்தமண்
சத்தியத்தின் சக்தி போற்றி நிற்கும் மண்
நித்த சக்தியாக நேரு நின்ற மண்
வாழிய பாரதம் வாழ்க மணித்திருநாடு
ஜெய் ஹிந்த்.. வந்தேமாதரம்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு, துவக்கப்பள்ளி மாணவர்கள், மகாத்மா காந்தி முகமூடி அணிந்து, கையில் தேசியக் கொடியுடன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.



indian-independence-day-graphics3.jpg



விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் தேசம் விழித்தெழாமல் உறங்குவது விதியின் விளையாட்டு.


பொழுது புலரந்தது; யாம்செய்த தவத்தால்
புன்மை இருட் கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே!




indian-independence-day-graphics.gifindian-independence-day-graphics.gifindian-independence-day-graphics.gif





பாரதியார் விவேகானந்தரின் உபதேசப்படிதான் பாரத தேசத்தைத் தெய்வமாக்கி, அந்தத் தெய்வத்திற்குப் 'பாரத மாதா' எனப் பெயர் தந்து, அந்த மாதாவை வழிபடப் பாடல்களைப் புனைந்தளித்தார்.


"வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"


என்று பாடினார் பாரதியார்.


கப்பலோட்டிய தமிழன் வ்.உ.சிதம்பரம் பிள்ளையை அவர் கப்பல் கம்பெனி நடத்திய காலத்திலேயே, 'வந்தே மாதரம் பிள்ளை' என்றுதான் மக்கள் அழைத்தார்கள்
வந்தேமாதரம் என்று உயிர்போம் வரை வாழ்த்துவோம்; 
சிரம் தாழ்த்துவோம்' என்று வ.உ.சி. முழங்கினார்.


slide













super-india_hw.gif (134787 bytes)




[nt6.jpg]







Orkut Scrap - India Independence Day: 7



No comments: