Wednesday, December 7, 2011

மன்னிய திருவருள் மலை

திருவண்ணாமலை திருவிழாக்கள்




பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.

பொருள் : இடப வாகனத்தில் பவனி செய்து, பல இல்லங்களிலும் பலி தேர்ந்து உண்ணும், நீர், நிலம், காற்று, ஆகாயம், அக்னி, சூரியன், சந்திரன் என்று அஷ்டமூர்த்தியாக  விளங்கும் திருவண்ணாமலை சிவபெருமானை வழி பட  ஊழ் விணை அழியும், ஒரு துன்பமும் நேராது என்று அப்பர் பெருமான் பாடுகின்றார்.

இப்பதிவில் திருவண்ணாமலையில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி காணலாம். இதற்கு முந்தைய பதிவை பார்க்க இங்கே செல்லவும். ஞான தபோவனரை வா என்று அழைக்கும் மலை.






அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை, காலை ஐந்து மணிக்கு திருமஞ்சனத்திற்கான  திருமஞ்சன கோபுரம் வழியாக  யாணையின் மேல் கங்கை தீர்த்தம்   கொண்டு வருவதுடன் கோவில் பூஜைகள் துவங்குகின்றன. பின்  பள்ளியறையிலிருந்து அண்ணாமலையாரும் (சிவ மேரு), உண்ணாமுலையம்மையும் தங்கள் தங்கள் சன்னதிக்கு எழுந்தருளுகின்றனர். ஆறு கால பூஜையும் நியமத்துடன்  நடைபெறுகின்றதுஇரவு அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் பள்ளியறை திரும்புவதுடன் பூஜைகள் முடிவடைகின்றன.



சித்திரையிலே வசந்த உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுகின்றன பத்தாம் நாள் திருவிழா சித்ரா பௌர்ணமியன்று (சித்திரை நட்சத்திரம்) மன்மத தகனம்வைகாசியிலே வைகாசி விசாகம் உற்சவம் ஒரு நாள். ஆனியிலே ஆனி பிரம்மோற்சவம் பத்து நாள் உற்சவம். ஆனி உத்திரத்தன்று நடராஜர் சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவம். ஆடியில் அம்பாளுக்கு பத்து நாள் ஆடிப்பூர பிரம்மோற்சவம், அம்மை பத்து நாள் பவனி பத்தாம் நாள் தீமிதி . சுந்தரர் உற்சவம். ஆவணியில் ஆவணி மூலம் உற்சவம். புரட்டாசியில் அம்மனுக்கு  ஒன்பது நாட்கள் நவராத்திரி உற்சவம். ஐப்பசியில் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம், முருகருக்கு ஆறு நாட்கள்  கந்தர் சஷ்டி உற்சவம். கார்த்திகையில் பதினேழு நாட்கள் கார்த்திகை தீபப்பெருவிழாமூன்று நாட்கள் தெப்போற்சவம் உட்பட.
கார்த்திகை தீபநாளன்று திருவண்ணாமலை 



 அண்ணாமலையார் சன்னதி முகப்பு
மார்கழியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஒரு நாள், பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கும் போது அவ்வாசல் வழியாக  பெருமாள் சேவை சாதிப்பது வழக்கம். சிவத்தலமான திருவண்ணாமலையில் பெருமாள் சோதி வடிவாக சொர்க்கவாசல் சேவை சாதிக்கின்றார்.  அண்ணாமலையார் சன்னதிக்கு பின் புறம் பாமா, ருக்மணி சமேத வேணு கோபாலர் சன்னதி உள்ளது. பெரிய திருவடி கருடன் மற்றும் சிறிய திருவடி அனுமனும் சேவை சாதிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று காலையில் இச்சன்னதியில்  ஒரு தீபம் ஏற்றி பூசிக்கின்றனர். அதன் பின்பு இத்தீபத்தை  பெருமாளாக கருதி பிரகாரத்திலுள்ள  வைகுண்ட வாசல் வழியாக கொண்டு வருவர். பஞ்சபூதத் தலங்களில்  அக்னிதலம் என்பதால் பெருமாள் சோதி வடிவாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் என்பது ஐதீகம்.     ஆருத்ரா தரிசனம் நடராசர் சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவம்.

 
தை மாதத்தில் உத்ராயண புண்யகால உற்சவம் பத்து நாட்கள். மாட்டுப்பொங்கலன்று  நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும் அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு பலகாரங்கள் மற்றும் பல வகையான  மலர்களாலான மாலை அணிவித்து  பூஜை செய்வர். அப்போது அண்ணாமலையார் நந்தியெம்பெருமானுக்கு அருட்காட்சி தந்து அருள் பாலிக்கின்றார்

 திருவூடல் உற்சவம்  எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி நாயனார்  மத்யஸ்தம் செய்து வைக்கின்றார்,  இந்த உற்சவம் திருஊடல் தெருவில் நடைபெறுகின்றது பின் உண்ணாமுலையம்மை ஊடல் கொண்டு திருக்கோவிலுக்கு திரும்பி விடுகின்றார்ஐயன் கிரி வலம் செல்கின்றார், அப்போது பிருங்கி ரிஷக்கு மோட்சம் அருளுகின்றார் அண்ணாமலையார், ஐயனுடைய நகைகள்  மேற்குப்பகுதியில் திருட்டுப்போகின்றன, பின் கிழக்குப் பகுதியில் அவை திரும்பக்கிடைக்கின்றன. அடுத்த நாள் காலை ஐயன் திருக்கோவிலுக்கு  திரும்பி வருகின்றார்

  மணலூர்ப் பேட்டை தீர்த்தவாரி உற்சவம் ஒரு நாள். கலசப்பாக்கம் ரத சப்தமி தீர்த்தவாரி உற்சவம் ஒரு நாள். மாசியில் மஹா சிவராத்திரி உற்சவம்  திருமால், பிரம்மா அடி, முடி தேடுதல் காணும் விழா (லிங்கோத்பவர் உற்சவம்). 

 மாசி மகம் பள்ளி     கொண்டப்பட்டு  தீர்த்தவாரி, வல்லாள இராஜாவின் வாரிசாக முடி சூடப்பட்டஅண்ணாமலையார் உண்ணாமுலையம்மையுடன் புறப்பாடு  கண்டருளி மணலூர் பேட்டைக்கு அருகில் பள்ளிகொண்டபட்டு எழுந்தருளி வல்லாள மஹாராஜாவிற்கு திதி     கொடுக்கிறார் அண்ணாம்லையார். 

பங்குனியில் பங்குனி உத்திர உற்சவம் ஆறு நாட்கள் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் அதன் பின் கீழ் அருணை என்ற சிற்றூருக்கு மறு வீடு         செல்வார். இவ்வாறு ஐயனின் திருவிழாக்கள் எல்லாம் சுற்றியுள்ள கிராம மக்களை  அருள் பாலிப்பதாக உள்ளது. இனி திருவண்ணாமலையென்றாலே நமக்கு நினைவுக்கு வருகின்ற கார்த்திகை பிரம்மோற்சவத்தைப் பற்றி காண்போம்.



திருக்கார்த்திகை தீபப் பெருவிழா


 மஹா தீபம் 

கார்த்திகைக்கு கார்த்திகைநா ளொருசோதி மலைநுனியிற் காட்டா நிற்போம்
வாய்த்தவந்த சுடர்காணிற் பசிபிணி  யில்லாதுலகில் மன்னி வாழ்வர்
பார்த்திவர்க்கு மருந்தவர்க்கு மிடையூறு தவிருமிது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தி லிருபத்தோர் தலை முறைக்கு முத்தி வரங் கொடுப்போமென்றார்.



என்ற பாடல் கார்த்திகை தீப தரிசன பலனை கூறுகின்றது. பிரம்மனும், விஷ்ணுவும், மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் எண்பத்தெண்ணாயிரம் ரிஷகளும் பரம கருணா மூர்த்தியான சிவபெருமானை இவ்வாறே சோதிப்பிழம்பாக காடசி தர வேண்ட கார்த்திகை மாதம் கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில் நாம் சோதி தரிசனம் தருவேன், அந்த தரிசனம் கண்டவர்களின்  பசிப் பிணி விலகும், மண்ணில் நல்ல வண்ணம் வாழுவர், எந்த துன்பங்களும் ஏற்படாது, அந்த ஜோதி தரிசனம் கண்டவர்களின் குலத்தில்  உள்ள    இருபத்தொரு  தலை முறையினருக்கு நாம் முக்தியும் அளிப்போம் என்று எம்பெருமானே திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார்இவ்வளவு சிறப்புக்      கொண்ட கார்த்திகை     தீபப்பெருவிழா  திருவண்ணாமலையில்  பத்து நாள் பெருவிழாவாக வெகு சிறப்பாக      நடைபெறுகின்றது


 உற்சவத்தின் முதல் நாள் துர்காம்பாள் உற்சவம், இரவு  துர்கை அம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா வருகின்றார். இரண்டாம் நாள் பிடாரியம்மன் உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் பிடாரியம்மன் திருவீதியுலா வருகின்றார். மூன்றாம் நாள் முழுமுதற் கடவுள் முருகனுக்கு மூத்தவரான வினாயகர் உற்சவம், இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் திருவீதியுலாஇந்த மூன்று நாட்களில் ஐயனார், சப்த மாதாக்கள், எல்லை தெய்வம் வழிபாடு நடைபெறுகின்றது.

கார்த்திகை திருவிழாவின் பத்து நாட்களும் தினமும் அதிகாலை மூன்று மணிக்கே நடை திறக்கப்பட்டு  மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம்  பூசைகள்         செய்யப்படுகின்றது. காலை பத்து மணி அளவில் அலங்கார மண்டபத்திற்கு வினாயகர், சந்திரசேகரர், உண்ணாமுலையம்மன் எழுந்தருளி  தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில்  மாட வீதி  உலா வந்து அருட்காட்சி தருகின்றனர். மாலை பஞ்ச மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கார மண்டபம் எழுந்தருளி சிறப்பு பூஜை கண்டருளி பின் பல் வேறு வாகனங்களில் அருட்காட்சி தந்து நாதஸ்வரம் முழங்க, திருமுறை பதிகம் ஒலிக்க  மாட வீதி உலா வருகின்றனர்.  



கார்த்திகை பெருவிழா கொடியேற்றம்   முதல் நாள் காலையில் பின் பஞ்ச மூர்த்திகள் தனித்தனியே வெள்ளி விமானங்களில் மாட வீதியுலா. இரவு விநாயகர் வெள்ளி மூஷிகம், அண்ணாமலையார் வெள்ளி அதிகார நந்தி, உண்ணாமுலையம்மன் வெள்ளி ஹம்ஷம், வள்ளி, தெய்வானை சமேத முருகர் வெள்ளி மயில், சண்டிகேஸ்வரர் வெள்ளி சின்ன ரிஷபம் ஆகிய வாகனங்களில் மாடவீதியுலா

 இரண்டாம் நாள் காலையில் விநாயகர் விமானத்திலும், சந்திரசேகரர் சூரியப்பிறை வாகனத்திலும் மாடவீதியுலா. இரவு பஞ்ச மூர்த்திகள் தனித் தனியே வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதியுலா

 மூன்றாம் நாள் காலை வினாயகர் விமானத்திலும் சந்திரசேகரர் பூத வாகனத்திலும் மாடவீதியுலா. மூன்றாம் திருநாள் காலை அண்ணாமலையாருக்கு 1008 சங்காபிஷேகம், கார்த்திகை சோமவாரத்தன்றும் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. மூன்றாம் நாள் உண்டியல் காணிக்கை பெறும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.   இரவு பஞ்ச மூர்த்தி வீதியுலா ஐயன் வெள்ளி சிம்ம வாகனம் அம்மை வெள்ளி அன்ன வாகனம்.

நான்காம் நாள் காலை வினாயகர் விமானத்திலும், சந்திரசேகரர் நாக வாகனத்திலும் மாடவீதியுலா. இரவு அருணாச்சலர்       வெள்ளி கற்பக விருக்ஷத்திலும், உண்ணாமுலையம்மை வெள்ளி காமதேனு வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள்  மாடவீதியுலா

 ஐந்தாம் நாள் காலை வினாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் மாடவீதியுலா, காலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றனஇரவு பஞ்ச மூர்த்திகள் வினாயகர் வெள்ளி மூஷிகம், சோணாச்சலர்  பெரிய வெள்ளி ரிஷபம், அம்பாள் வெள்ளி ரிஷபம், முருகர் வெள்ளி மயில், சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப சேவை தந்தருளி மாடவீதியுலா. ஐந்தாம் திருவிழாவன்று மூலஸ்தானத்தில் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும்  தங்க கவசம் சாற்றப்படுகின்றது. மற்ற தங்க கவசம் சாற்றப்படும் நாட்கள்  கார்த்திகை தீபம், தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு  ஆகியன
 
  அண்ணாமலையாரை வெள்ளி யாணை வாகனத்தில்
   அறுபத்து மூவருடன் சேவிக்கும் நால்வர் 

ஆறாம் நாள் காலை வினாயகர் மூஷிக வாகனம், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருக்கு தரிசனம் தரும் அறுபத்து மூவர் விழா. இரவு அண்ணாமலையார் வெள்ளி இரதம், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் பவனி

 
 ஏழாம் நாள் திருத்தேரோட்டம், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி மஹா இரதத்தில், இரவு பஞ்ச மூர்த்திகள்  இரதத்திலிருந்து ஆஸ்தான மண்டபம் திரும்புதல். இன்று கரும்புத்   தொட்டில் பிரார்த்தனை செலுத்துபவர்கள் அனேகம். எட்டாம் நாள் காலை வினாயகர் சந்திரசேகரர் வெள்ளி விமானத்தில் பவனிமாலை தங்க மேருவில் பிக்ஷாடணர் உற்சவம்இரவு தனித்தனி   குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் பவனி. ஒன்பதாம் நாள் காலை வினாயகர் சந்திரசேகரர் கண்ணாடி விமானங்களில் மாடவீதியுலா காட்சி. இரவு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா அண்ணாமலையார் கைலாய வாகனத்திலும், அபீத குஜாம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.



கார்த்திகை பெருவிழாவின் பத்தாம் நாள் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இனைந்து வரும் நாள், ஐயன் நாம் எல்லோரும் உய்ய ஜோதிப் பிழம்பாக அண்ணாமலை உச்சியில் காட்சி தரும் நாள், மாயை என்னும் இருளை அகற்றும் நாள். அம்மை இடப்பாகம் பெற்று அர்த்த நாரீசுவராக காட்சி தந்து அருள் பாலிக்கும் நாள் காலை நான்கு மணி அளவில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படுகின்றது. முதலில் சூரியனின் முன் யாகம் நடத்தப்படுகின்றது அந்த யாகத்தீயிலிருந்து அண்ணாமலையார் சன்னதியில் முதல் பரணி தீபம் பெரிய அகலில் ஏற்றப்படுகின்றது  பின் அந்த ஒரு அகல் தீபத்தால் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடத்தப்பெற்று  நந்திகேச்வரர் முன்னால் அந்த தீபத்தில் இருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்படுகின்றன.  இவை சிவபெருமானின் ஐந்து தத்துவங்களைக் குறிக்கின்றன.



பரணி தீபத்தின் உட்பொருள்: பரம் பொருளானது அங்கிங்கெனாதபடி எங்கும்   பேரொளி மயமாக நிறைந்திருக்கின்றது என்பதை காட்டுகின்றது. இன்பப் பொருள் எல்லா உயிர்களுக்கும் கருனை காட்டும் பொருள், எண்ணிலடங்காமல்  பரந்து விரிந்து செறிந்து நிற்கும் அகண்ட  கோடி உயிர்களையும் தன்னகத்தே அடக்கிக்    கொண்டிருக்கிற    பொருள், எல்லா உயிர்களையும் இயக்கும் பொருள், மன வாக்கிற்கும் எட்டாமல் நிற்கின்ற பொருள். பிறப்பிறப்பு  இல்லாத  எல்லாம் வல்ல எங்கும் உள்ள பரம் பொருள் ஐந்தொழில்      செய்ய பஞ்ச மூர்த்திகளாவதை விளக்குவது பரணி தீபம்.



 இவ்வாறே உண்ணாமுலை  அம்மனின் சன்னதியிலும் ஐந்து தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை பஞ்ச சக்திகளை குறிக்கின்றன. பின்னர் வினாயகர், முருகர் முதலிய அனைத்து சன்னதிகளிலும் காலை தீபம் ஏற்றப்படுகின்றன. சிவ சக்தி ஐக்கியத்தில் தான் இந்த பிரபஞ்சம் முழுவதும் தோன்றியது என்பதை உணர்த்தமாலை இந்த தீபங்கள் அனைத்தும் அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்படுகின்றன. இறுதியில் அனைத்து உயிர்களும்  அந்த பரமேஸ்வரரின் திருவடிகளில் தான்  ஒடுங்குகின்றது என்பதை உணர்த்த.   அண்ணா மலையாரின் தீபத்தில் இருந்து ஏற்றப்பட்ட ஐந்து தீபங்களில் ஒன்று தான் திருவண்ணாமலை உச்சிக்கு பரதவ குல மக்களால் ஒரு மண் பானையில் வைத்து எடுத்து    செல்லப்படுகின்றது மஹா தீபத்திற்காக.



காலை முதலே திருவண்ணாமலை நகரமெங்கும் மக்கள் கூட்டம் வந்து குவியத் துவங்குகின்றது, அதே சமயம் மலை உச்சியில் பரதவ (செம்படவர்) குல மக்கள் மஹா                 தீபக்கொப்பரையை  தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். மஹா தீப கொப்பரை தாமிரத்தால் ஆனது 92 கிலோ செம்பு மற்றும் 110 கிலோ இரும்பு சட்டங்கள்                     கொண்டு தயாரிக்கப்பட்டது இந்த இராட்சச கொப்பரை. இதன் உயரம் 7 அடி,                கொள்ளவு  சுமார் 3500 கிலோ நெய், அதில் போடப்படும் திரி  1000 மீட்டர் காடாத்துணியால் தயாரிக்கப்படுகின்றது. தீபம் ஏற்றிய பின் இடைவிடாது 11 நாட்கள ஒளி தரும். இதன் ஒளி சுமார் 15 கி.மீ தூரம் சுற்றளவு ஒளிர் விடுகின்றதுதீபத்திற்கு                  நெய்க்குடம் செலுத்த வேண்டிய பக்தர்கள் அந்த நெய்க்குடத்தை தங்கள் தலையில் சுமந்து சென்று  புண்ணிய மலை ஏறி  தங்கள் காணிக்கையை       செலுத்துகின்றனர். நேரம் செல்ல செல்ல அனைவரது எதிர்பார்ப்பும் அந்த  மஹா தீபம் ஏற்றப்படும் தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றது. ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும் பக்தர்களில் பலர் காலையில் இருந்தே உண்ணாமல் உமாமஹேஸ்வர  விரதமிருக்கின்றனர். அவர்கள் தீப தரிசனம் கண்ட பிறகே  உணவு உண்பர். இன்று ஐயனுக்கு அவலாலும், பொரியாலும் உருண்டை பிடித்து இறைவனுக்கு நிவேதனம் செய்கின்றனர்அண்ணாமலையானுக்கு அரோகரா என்னும் மந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் மந்திரமும் எங்கும் ஒலிக்கின்றது.



மாலை 4:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பஞ்ச மூர்த்திகள் விநாயகர் தொடங்கி        ஒவ்வொருவராக மூன்றாம் பிரகாரத்தில் , கொடி மரத்திற்கு எதிரில்  தீப தரிசன மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். தீப தரிசன மண்டபத்தில் இருந்து மலை உச்சி         தெளிவாக தெரியும், எனவே தீப தரிசனம் காண பஞ்ச மூர்த்திகள் தயாராகி விட்டனர். மலையிலே சாரை சாரையாக மக்கள் கூட்டம் ஏறுவது அதிகமாக தொடங்கி விட்டது. எதிர்பார்ப்பும் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றது தாயது நோக்கும் குழந்தையைப் போல அனைவது கண்களும் மலை உச்சியையே நோக்கி திரும்பியிருக்கின்றது ஆண்டு தோறும் இலட்சக் கணக்காணோர்   தீப தரிசனம் கண்டு நன்மையடைகின்றனர்மெள்ள சூரிய ஒளி குறையத் தொடங்குகின்றது. அண்ணாமலையானுக்கு அரோகரா என்னும் முழக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக்       கொண்டு வருகின்றது. கோவிலின் உள்ளே இருப்பவர்கள் அர்த்தநாரீசுவரர் எப்போது ஆனந்த கூத்தாடி வருவார் என்று காத்திருக்க வெளியே இருக்கும் கூட்டம் எப்போது எம்பருமான் ஜோதி வடிவில் மலை உச்சியில் காட்சி தருவார் என்று காத்திருக்கின்றனர். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும் இன்றும் கார்த்திகை தீபத்திருநாளன்று திருவண்ணாமலை நகரிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் யார் வீட்டிலும் தீபத்திற்கு முன்னால் மாலை விளக்கு ஏற்றப்படுவதில்லை தீப தரிசனம் கண்ட பிறகே அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்றப்படுகின்றது.


அர்த்தநாரீஸ்வரர்



பிரதோஷ காலமாம் சரியாக மாலை ஆறு மணிக்கு  கோவிலின் உள்ளே இருந்து ஆனந்தக் கூத்தாடி அர்த்தநாரீசுவரர் வருகின்றார், தாரை தப்பட்டகள் முழங்க அவர் கொடி மரத்தில் வந்தவுடன் காலையில் ஏற்றப்பட்ட பரணி தீபங்கள் அனைத்தும்      கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் சேர்க்கப்படுகின்றன. பிரம்ம தாளம் இசைக்க அக்னி மண்டலத்தின் நடுவில் ஐயன் ஆடியதைக் குறிக்கும்  வகையில் பெரிய வட்ட வடிவ தீவட்டிகளின் நடுவில் இரண்டு நிமிடம் நடனமாடுகிறார் அர்த்தநாரீஸ்வரர். உடனே வைகுந்த வாசல் வழியாக ஒரு பாணம் வானில் செலுத்தப்படுகின்றது. அதைப் பார்த்தவுடன் மஹா தீபம் ஏற்றப்படுகின்றது, அண்ணாமலையானுக்கு அரோகரா என்னும் முழக்கம் வானை முட்டுகின்றதுகாதலாகி கசிந்து கண்ணிர் மல்கி, பேச்சிழந்து, நிலை தடுமாறி பகதர்கள் அனைவரும் அந்த அண்ணாமலையாரை கை குவித்து வணங்கின்றனர், நகரம் முழுவதும் உற்சாகம் பொங்கி வழிகின்றது, வீடுகள அனைத்திலும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. நகரமே ஒரு பெரிய தீபமாக காட்சி தருகின்றது. தீப தரிசனம் சாப விமோசனம் என்று அன்பர்கள் மகிழ்ச்சியடைந்து கிரி வலம் செல்ல துவங்குகின்றனர். அர்த்த நாரீசுவரர் எப்போதும் கோவிலை விட்டு       வெளியே வருவதில்லை, அவர் தரிசனம் மஹா தீபத்தன்று மட்டும் சுமார் இரண்டு நிமிடம் மட்டுமே கிடைக்கக் கூடியது. சிவ பரம் பொருளில் இருந்து தோன்றிய அனைத்து தீர்த்தங்களும் மீண்டும் ஒன்றாக அந்த பெருமானிடத்திலேயே ஒடுங்கும் என்பதைக் குறிப்பதே மஹா தீபம்.

 மலைஉச்சியில் மஹா தீபம்  



 தனக்குவமை இல்லாத தனிப்பெருஞ்சுடர் ஒன்று ஞானப் பெருவிளக்காக  மலையுச்சியிலே தோன்றி  ஞாலத்து      உயிர்களுக்கெல்லாம்  நன்கு வாழ கருணை புரிகின்றது. சிவ தீர்த்தங்களாக காட்டும் அகல் விளக்குகள் அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்படும் போது அங்கு அர்த்தநாரீஸ்வரர் வருகின்றார். உமையம்மை தவம் புரிந்து இடப்பாகம் பெற்று ஒரே சுடராக இருவரும் ஒருவராக, ஏக பரஞ்சுடராக மலை உச்சியில் காட்சி தருகின்றனர். சிவ ஒளியும் சக்தி ஒளியும் சேரும் அந்த மஹா தீபத்தை கண்டவர் தம் 21 தலைமுறையினருக்கு முக்தி வரம் அருளுகின்றார் அண்ணாமலையார். மலையில் தீபம் ஏற்றியவுடன் திருவண்ணாமலையில் அணைவரும் தங்கள் வீட்டின் முன் குத்து விளக்கு, லக்ஷ்மி விளக்கு, மா விளக்கு, மண்டகப்படி வைத்து  ஜோதியைப் பார்த்து தேங்காய் பழம் படைத்து கற்பூரம் காட்டி அண்ணாமலையாரை கும்பிடுவதைப் பார்க்க மெய் சிலிர்க்கின்றது. இரமண மகரிஷி இந்த உடம்பு நான் எண்ணும் எண்ணத்தை அழித்து மனதை ஆன்மாவில் அழித்து உன் முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியை காண்பதே தீப தரிசனம் என்று கூறுகிறார்



தீப தரிசனம் பெற்றோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை, என்ன தவம்                         செய்தோம் இன்னல் தீர, அண்ணாமலை தீப தரிசனம் பெற என்று ஆனந்த கூத்தாடுகின்றனர் பக்தர்கள்ஆதியும் அந்தமும் இல்லாத , அருவுருவமான ஓளி ரூப நாயகனையும் நாயகியையும்  அந்த ஜோதி ரூபமாகவே தரிசனம் செய்கின்றோம். ஜோதிமயமான உச்சியைப் பார்க்கும் போது மனம் உருகி நெகிழ்கின்றது. பிறவி எடுத்ததன் பலன் இதுவோ என்று உள்ளம் கரைகின்றது. இனி எத்தனை பிறவி எடுத்தாலும் திருவருனையே தஞ்சம் என்ற ஒரு மன்றாடல் எழுகின்றது. கார்த்திகை விளக்கு புற இருளை மட்டும் நீக்குவதில்லை அக இருளாம் அறியாமையும்  நீக்குகின்றது,                     மெய்யுணர்வை ஊட்டுகின்றது. இவ்வாறு தனக்குவமை இல்லாத       தனிப்பெருஞ்சுடர் ஒன்று ஞானப் பெரு விளக்காய்  மலையுச்சியில் தோன்றி ஞாலத்து உயிர்களுக்கெல்லாம் நன்கு வாழ கருணை புரிகின்றதுதீப தரிசனத்திற்குப்பின் ஐயனின் சன்னதி பூட்டப்படுகின்றது. இறைவன் ஜோதி வடிவில் மலை உச்சியில்  காட்சி தருகின்றான் என்பதால். அடுத்த நாள் காலையில் தான் பின் சன்னதி திறக்கப்படுகின்றது.                         கொடியிறக்கதிற்குப் பின்  தங்க விமானத்தில்  பஞ்ச மூர்த்திகளும் மாட வீதி வலம் வருவதுடன் பத்தாம் நாள் உற்சவம் நிறைவு பெறுகின்றது. திருவண்ணாமலையில்  கார்த்திகை நாளன்று  ஏற்றப்பட்ட தீபம் மேலும் 11 நாட்கள் தரிசனம் தந்து     கொண்டு இருக்கும்.



மஹா தீபத்திற்கு அடுத்த மூன்று நாட்கள் அய்யங்குளத்தில் தெப்போற்சவம்முதல் நாள் சந்திரசேகரர் தெப்போற்சவம், தெப்போற்சவம் கண்ட பிறகு அண்ணாமலையாரும் , உண்ணாமுலை அம்மனும் கிரி வலம் வருகின்றனர். இரண்டாம் நாள்  பராசக்தியம்மன்       தெப்போற்சவம். மூன்றாம் நாள் சுப்பிரமணியர்    தெப்பம். திருவிழா நிறைவாக நான்காம் நாள் சண்டிகேஸ்வரர் உற்சவம், வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் மாட வீதி உலா வருகின்றார்இவ்வாறு வருடாவருடம் தீபப்பெருவிழா வெகு சிறப்பாகக்            கொண்டாடப்படுகின்றது.



உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகழியா

மட்ம்பெனும் உணர்நெய்யட்டி உயிரெனுந் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயால் எரிகொள் இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே!



ஒருவன் தன்னுடைய உடம்பு என்று கூறப்படும் வீட்டினுள்ளே  உள்ளத்தை அகலாக வைத்து, அறியாமையை கெடுக்கின்ற தெளிவுஉணர்வு என்னும் நெய்யைப் பெய்து  உயிர் என்னும் திரியைக் கூடும்படி  செய்துஅந்த உயிர் என்னும் திரியில்  எரிகிற வியாபக  அறிவு என்னும் ஒளியிற் அமைதியாக சிவபெருமானுடன் ஒன்றி  இருந்து அகக்கண்ணிணினால் பார்த்தால் கடம்ப மரத்தடியிலே  அமர்ந்திருக்கின்ற         முருகப்பெருமானுடைய தந்தையாகிய    சிவபெருமானின்  வீரத்தண்டை அணிந்த திருவடிகளை உணர்ந்து பேரின்பம் அடையலாம். கழல் -இடர்களை ஒழிக்கும் வீட்டின்பத்தை அருளும்.    இறைவன் உயிரினுள்ளேயே இருக்கின்றான். ஆனால் ஆணவம் . கன்மம், மாயை என்னும் மலங்கள் சூழப்ட்டிருப்பதால் உயிர் அறியாதபடி மறைந்திருக்கிறான். சீவன் எப்போது இந்த மலங்களையெல்லாம் விடுத்து நிர்மலமாகின்றதோ அப்போது ஜோதி வடிவாக, ஆகாய வடிவாக ஆண்டவனைக் காணலாம் அதுவே முக்தி என்பதை உணர்த்துவதே கார்த்திகை தீப திருவிழாஇத்திருவிழா நடைபெறும் திருவண்ணாமலை சென்றுநினைக்க முக்தி தரும் அண்ணாமலையாரை மறக்காமல் நினைத்து உய்வோமாக.


அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி 

இப்பதி்வுடன் திருவண்ணாமலை பதிவுகள் நிறைவடைகின்றன. உண்ணாமுலையுடனாய அண்ணாமலையார் அருள் அனைவருக்கும் சித்திக்க பிரார்த்தித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் இனிய கார்த்திகை  தீப நல்வாழ்த்துக்கள்.

28 comments:

சென்னை பித்தன் said...

அழகிய படங்களுடன் அருமையான பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வு..
பாராட்டுக்கள் வாழ்த்துகள்..

Advocate P.R.Jayarajan said...

எளிமையான எழுத்து நடை.. சிறப்பான படங்கள்... நிறைய முயற்சி...
நெஞ்சில் நிற்கும் நல்ல பதிவு

ரிஷபன் said...

தீப தரிசனம் கிட்டியது. நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

தீப தரிசனம். கார்த்திகை வாழ்த்தக்கள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமையான புகைப் படங்களுடன் பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். வருடா வருடம் தீபம் முடிந்த பத்து நாட்களுக்குள் நண்பர்களோடு சென்று கிரி வளம் வருவேன். இம்முறை மானசீக கிரிவலமதான் செல்ல முடிந்தது.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

காலத்தே அவசியமான பதிவு....!

காட்டான் said...

அழகான படங்களோடு கூடிய நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்..

vetha (kovaikkavi) said...

நிறைந்த முயற்சி. நிறைந்த தகவல்கள் சகோதரி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்
http://www.kovaikkavi.wordpress.com

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத பல அரிய தகவல்களைத் தாங்கிய
அருமையான பதிவு
படங்களும் தங்கள் எழுத்து நடையும்
மிகவும் அருமை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

sury siva said...

ஆஹா !! எத்தனை அழகான ஆன்மீக பதிவு.
இத்தனை நாட்கள் இங்கே வராது
எப்படி இருந்தேன் !!!

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com

அம்பாளடியாள் said...

பகிர்வும் படங்களும் அருமை வாழ்த்துக்கள் சகோ .மிக்க
நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

அழகிய படங்களுடன் அருமையான படைப்பிற்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .

MaduraiGovindaraj said...

அழகிய படங்களுடன் அருமையான பதிவு.

S.Muruganandam said...

//அழகிய படங்களுடன் அருமையான பதிவு.//

மிக்க நன்றி சென்னைபித்தன்

S.Muruganandam said...

வாருங்கள் இராஜேஸ்வரி மிக்க நன்றி

S.Muruganandam said...

//நெஞ்சில் நிற்கும் நல்ல பதிவு//

மிக்க நன்றி ஜெயராஜன்

S.Muruganandam said...

மிக்க நன்றி ரிஷபன்

S.Muruganandam said...

தங்களுக்கும் (காலம் தவறிய ) கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் சி.பி.செந்தில்குமார்.

S.Muruganandam said...

அடுத்த வருடம் தங்களுக்கு கிரிவலம் சித்திக்க அந்த உண்ணாமுலையுமையுடனாகிய அனாமலையாரை வேண்டிக்கொள்கிறேன் வித்யா அம்மா.

S.Muruganandam said...

மிக்க நன்றி தோழன் தமிழன் அவர்களே.

S.Muruganandam said...

வாருங்கள் காட்டான் மிக்க நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி
கோவைக்கவி அவர்களே.

தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன் கவிதைகள் அருமை அதற்கேற்ற படங்களும் அருமை. மிக்க நன்றி சகோதரி. இனி அடிக்கடி அப்பக்கம் வருகிறேன்.

S.Muruganandam said...

//தொடர வாழ்த்துக்கள்//

அடியேனின் வலைப்பூக்களில் ஒன்று
http://natarajar.blogspot.com சமயம் கிட்டும் போது சென்று பாருங்கள்.

தங்களைப்போன்ற அன்பர்கள் வந்து வாசித்து பின்னூட்டம் இடும் போது தொடராமல் இருப்பது எப்படி பணி தொடரும்.

மிக்க நன்றி Ramani அவர்களே.

S.Muruganandam said...

Sury தாத்தா நான் உங்கள் மற்றும் கவிநயாவின் எல்லா பதிவுகளையும் பார்ப்பவன். தாங்கள் என்னுடைய காரணீஸ்வரம் பதிவில் கவிதி ஒன்றும் வரைந்தி கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி

S.Muruganandam said...

வாருங்கள் அம்பாளடியாள். மிக்க நன்றி

S.Muruganandam said...

மிக்க நன்றி மதுரை கோவிந்தராஜன் அவர்களே.

S.Muruganandam said...

பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்ற இடத்தில் வலை தொடர்பு இல்லாத காரணத்தால் பின்னூட்டம் தாமதமாக இட்டுள்ளேன். மன்னிக்கவும். தங்களின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. அடியேனின் ஒரு வலைப்பூ

http://kailashi.blogspot.com இங்கு சென்று திருக்கயிலை நாதரின் அருள் தரிசனம் பெறுங்கள்.