Saturday, March 17, 2012

உடல் - பகுதி - 3

ஆதாரம் - 6

மூலாதாரம்  - இரண்டு  இடுப்பு  எலும்புகளும் , முதுகு  எழும்பும்  ( முதுகுத்  தண்டுவடம் ) ஆசனப் பகுதியில் சேரும் இடத்தில் நடுவில் இருப்பதாக நம்பப் படுகிறது.
மூலாதாரத்தின் குணங்கள்: விவேகம், குழந்தை உள்ளம்.
சுவாதிஷ்டானம் - மூலாதாரத்திற்கு 2 அங்குலம் மேலே அமைந்திருக்கிறது.
இதன் குணம் : கற்பனை வளம், படைப் பாற்றல்.
மணி பூரகம்: சுவாதிஷ்டானத்திர்க்கு மேலே ஆறு அங்குல தூரத்தில் அமைந்திருப்பதாக நம்பப் படுகிறது.

இதன் குணம்: நிறைவு, திருப்தி, முன்னேற்றம்.
அனாகதம்: இதயம் உள்ள பகுதியில் இருப்பதாக நம்பப் படுகிறது.
இதன் குணம்: அன்பின் பிறப்பிடம், தன்னம்பிக்கை, பயமின்மை.
விசுக்தி: குரல்வளைப் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் குணம்:நட்புணர்வு, கூட்டுணர்வு, பற்றற்ற நிலை.
ஆக்ஞா: புருவ நடுப் பகுதி.
இதன் குணம் : மன்னிப்பு.

இவற்றினின்று மேம்பட்ட நிலையே சஹஸ்ராரம் எனப்படும் தெய்வீக உணர்வில் திளைக்கும் யோகா நிலையாகும். ஆதார நிலைகளில் ஆறு நிலைகள் மனித நிலைக்கும் இந்த ஏழாம் நிலை அதனைக் கடந்த யோகி, மெய்ஞான நிலையாலர்களுக்கும் கொள்ளப்பட்டது.


நாடிகள் 10:
சூரிய  கலை  நாடி : சந்திர கலை நாடி; சுழுமுனை நாடி, சிங்குவை நாடி; புருடன் நாடி, காந்தாரி நாடி; அத்தி நாடி; அலம்புடை நாடி; சங்கினி நாடி; குருநாடி.

இந்த நாடிகள் உடலின் உறுப்புகளின் செயல்பாட்டினை தொய்வின்றி
 செயல்படத் தூண்டுகின்றன.

அவஸ்தை - 5
மனித உடலில் உண்டாகும் ஐந்து நிலைகளைக் குறிக்கின்றது.
நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் (துரியம்), உயிர்ப்படக்கம் (துரியாதீதம்)
ஐம்பொறி, ஐம்புலன் , நான்கு கரணங்கள் இனைந்து இன்ப துன்ப நிலைகளை அறிந்து செயல்படுவது நனவாகும். தன்னை மறந்த நிலையில், தன விருப்பத்திற்க்கேற்ப, இருக்கும் நிலை கனவாகும். மனம், அறிவு, நினைவு, முனைப்பு இவையெல்லாம் ஒருங்கிணைந்து தான் கண்டதையும், கேட்டதனையும் பிறருடன் வெளிப்படுத்த இயலாத நிலையே உறக்க நிலையாகும்.இதன் வீரிய நிலை பேருறக்க நிலை.. ஐம்பொறி, ஐம்புலன், நான்கு கரங்கள் ஒடுங்கி, தொடு உணர்வின்றி, செயல்பாடு இன்றி, எதனையும் உணரா நிலையே உயிர்ப்படக்கமாகும்.

1 comment:

Raj said...

Good Spiritual Article