Tuesday, April 17, 2012

கேப்டனுக்கு ஒரு 'o' போடுவோம்!

April 17: விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில்  மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் எம்.எல்.ஏ.  விஜயகாந்த்.

தொடர் மின்வெட்டு  குடிநீர் கிடைக்காமல் அவதியுறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய லாரியை அனுப்பி வைத்தார் விஜயகாந்த்.


இன்று முதல் குடிநீர் சப்ளை துவக்கப்பட்டது. தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு, லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ய தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்தார் விஜயகாந்த்.
சிந்திக்கவும்: விஜயகாந்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தனது சொந்த செலவில் தொகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி இருப்பது ஒரு சிறந்த முன் உதாரணம் ஆகும். இதை போன்று மற்ற தொகுதி எம்.எல்.ஏ.களும் செய்தால் மக்கள் பிரச்சனைகளில் சிறிதளவாவது குறையும்.
தேர்தல் வந்ததும் மக்கள் கால்களில் விழுந்து ஓட்டுக்களை வாங்குவதும் தேர்தல் முடிந்ததும் தொகுதி பக்கமே வராமல் எம்.எல்.ஏ ஹாஸ்டலே கதி என்று கிடப்பதுமாக இருக்கும் எம்.எல்.ஏ.கள் மத்தியில் விஜயகாந்த் வித்தியாசமாகவே செயல்படுகிறார். அவரது இந்த சேவைகளுக்கு நமது பாராட்டுகள். இப்போதுதான் உண்மையான கேப்டனாக மாற முயற்ச்சிக்கிறார் விஜயகாந்த்.
ரௌத்திரம் பழகு
...யாழினி...

2 comments:

சசிகலா said...

இந்த காலத்து அரசியல் வாதிகளுக்கு நடுவில்
நிச்சயம் கேப்டனுக்கு எனது நன்றி .

Anonymous said...

//தொகுதி பக்கமே வராமல் எம்.எல்.ஏ ஹாஸ்டலே கதி என்று கிடப்பதுமாக இருக்கும் எம்.எல்.ஏ.கள்//

i dont think so friend... i visited mla hostel, not able to see any one MLA..they are busy with scheduled work....